பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

சைவ இலக்கியவரலாறு

உள்ளத்தில் விளங்கும் புந்தி வட்டத்தில் இறைவன் சிவமாய்க் காட்சி அளிக்கின்றான். அக்காட்சி தேனும் இன் னமுதுமாய் அவர்க்கு இன்பம் செய்கின்றது. அவ்வின்பத்தில் மூழ்கித்திளைக்கும் திருநாவுக்கரசர், அங்கே காட்சி நல்கும் சிவத்துக்கு2த் தன் உள்ளம் கோயிலாவதையும், உடல் இடங் கொண்டதாம் அங்கு ஊறுகின்ற இன்பத்தை நுகர்வதையும், அதனால் நுகராதவாறு தடை செய்து நின்ற வினைத்தொடர்பு நீங்கி மறைவதையும், சிவன்பால் பேரன்புபெருகி மிகுவதையும் உணர்கின்றார் ; இத்தனைக்கும் ஏதுவாவது இறைவன் தம்மைக் கூழாட்கொண்ட பேரருளே என்று தெளிகின்றார். அத்தெளிவால் இறைவனை நோக்கி, '"என்பு இருத்தி நரம்பு தோல் புகப் பெய்திட்டு "என்னையோர் உருவமாக்கி, இன்பிருத்தி முன்பிருந்த வினை தீர்த்திட்டு என் உள்ளம் கோயிலாக்கி, அன்பு இருத்தி அடியேனைக் கூழாட்கொண்டு அருள் செய்த ஆரூரர்"3 என்று பாராட்டி உரைக்கின்றார். இவ்வாறு அகவழிபாடு சிவபோக நுகர்ச்சிக்கு வாயிலாவது கொண்டு, "காயமே கோயிலாகக் கடிமணம் அடிமையாக, வாய்மையே தூய் மையாக மனமணி இலிங்கமாக, நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டிப், பூசனை ஈசனார்க்குப் போற்ற விக் காட்டினோமே"4 என்றும், இதனைச் செய்வாரது பாவம் நாசமாம்5 என்றும் எடுத்துரைத்துள்ளார்.

அகப்பூசை கைவரப் பெற்றோர்க்குப் புறப்பூசை இன்றி யமையாததன்று என்பவரும் உண்டு. புறப்பூசை மிக்க தூய்மையும் காண்பார் நெஞ்சு உருகித் தெருளும் வகை ______________________________

1.புந்திவட்டத்திடைப் புக்கு நின்றானேயும் பொய்யென் பனோ- 98 : 1; 113; 5. புந்தியாய்ப் புண்டரிகத்துள்ளாய் போற்றி-219: 9.
2. சிந்திப்பார் சிந்தைக்கண் இறைவன் நல்கும் காட்சியைச் சிவமெனவே நாவரசர் வழங்குகின்றார். சிந்தையுட் சிவமதானார் 29 : 4, 35 : 2; 48 : 5 162 : 5. எனப் பலவிடத்தும் கூறுவது காண்க. -
3. திருநா. 5 : 2. 
4. திருநா. 76 : 4.
5.  ஷ    245 : 3,