பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

143

தருநாவுக்கரசர்

முயற்சி கைவிடாத அவட்கு அவர்கள் அவளது காதலனைப் பழித்து. "உறவு பேய்க்கணம், உண்பது

வெண்டலை
உறைவது சமம் உடலில் ஓர் 
பெண்கொடி
துறைகளார் கடல் தோணிபுரத் 
துறை
இறைவனார்க்கு அவள் என் 
கண்டு அன்பாவதே"1

என்பதும் பிறவும் மிக்க இன்பம் பயப்பனவாகும்.

 இறைவன்பால் தமக்கிருந்த பேரன்பால் அகத்துறையில் மகளிர் கூறும் கூற்றில் வைத்துப் பழிப்புரை வழங்கிய திருநாவுக்கரசர், தாமே பழிப்பு வாய்பாட்டால் இறைவனைப் பரவிப் புகழ்ந்து பாடும் அருட் பாட்டுக்களும் பலவுள்ளன. 

இறைவன் திருமேனி மேல் வெண்ணீறு கிடந்து ஒளி விளங்குதலைக் கண்டு, சந்தனம் முதலிய விரைப்பொருள்கள் விலைமிக்குடைய எனக் கருதியும் விலையின்றி எங்கும் யாவர்பாலும் கிடைக்கக்கூடியது திருநீறு எனக்கொண்டும் அதனை மேனியில் பூசிக்கொண்டு விளையாடுகின்றான் இறைவன் என்பாராய், "விலையிலி சாந்தம் என்று வெறி நீறு பூசி விளையாடும் வேதவிகிர்தர்"2 என்றும், இறைவன் இடையில் நால்விரற் கோவணம் உடுப்பவன் என்பது பற்றிக் கோவணம் உடுத்து மகளிர் இல்லங்களில் பலி யேற்கச் சென்று திரியும் நீயிர், மலைவாணர் பாவை யாகிய உமை நங்கையை மணந்த ஞான்றும் இக்கோவ ணத்தைத்தான் உடுத்திருந்தீரோ என வினவுவாராய், "இடும் பலிக்கு இல்லந்தோறும் உழிதரும் இறைவன் நீரே, நெடும்பொறை மலையர் பாவை நேரிழை நெறிமென் கூந்தல், கொடுங்குழை புகுந்த அன்றும் கோவணம் அரையதேயோ?"3 என்றும், இறைவன் திருமுடியில் கங்கையும் பிறைத்திங்களும் பாம்பும் உண்டு என்பது உலகறிந்த செய்தியாதலின், ' கங்கையாகிய நங்கையை நீர் நும்- ______________________________

1. திருநா. 159 ; 8.
2. திருநா. 8 : 9.
3.    ஷ.  77 : 1.