பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

145

திருநாவுக்கரசர்


தெளிந்த நாவரசர், '" கள்ளரோ, புகுந்தீர்" என்றலும், இறைவன் அருளொழுக நோக்கி '"வெள்ளரோம் என்று நின்றர் விளங்கு இளம்பிறையினரே 1" என்றும் பாடிப் பரவுகின்றார். ஒருகால் இறைவன் திருநாவுக்கரசர்சென்னி மேல் தன் திருவடியைச் சிறப்பித்தாகை, அது நினைந்து அன்புபெருக உளங்குழைந்து, தம் சென்னியின் வன்மை பால் இறைவனுடைய மெல்லிய திருவடிகள் வருந்துமென நினைந்து, " மூர்த்தியென் உச்சிதன் மேல் வைத்த கால் வருந்தும் என்று வாடி நான் ஒடுங்கினேனே "2 என்றும், இத் திருவடிகளைக் காண்டற்குத் தேவதேவர்கள் முயன்றும் முயற்சி முற்றாது அமைந்தாராக, மார்க்கண்டன் உயிர் கொள்வான் சென்று வீழ்ந்த காலன் அத்திருவடிகளைக் கண்டு கொண்டான் என்பாராய், "வழிபாடு செய்யும் பாலன் மிசைச்சென்று பாசம் விசிறி மறிந்தசிந்தைக் காலன் அறிந்தான் அறிதற்கரியான் கழலடியே"3 என்றும், இறைவன் மாத்திரம் என்பால் அருள் கொண்டு ஆட்கொள்வானாயின், அவனைப் பின் என் முன்னே தானே வந்து எதிர்ப்படுமாறு செய்து கொள்வேன் . எங்ஙன மெனில், அவன் திருப்பெயர்களுள் ஒன்றாகிய பவன் என்னும் திருப்பெயரைப் பற்றிப் பவபவ. பவபவ எனப் பன்னாளும் இடைவிடாது அழைப்பேன் இறைவனும், இவன் பன்னாள் அழைப்பொழியான் என்று எதிர்வருவான் என்பார், "அவன் எனை ஆட்கொண்டு அளித்திடுமாகில் அவன்றனை யான், பவன் எனும் நாமம் பிடித்துத் திரிந்து பன்னாள் அழைத்தால், இவன் எனப் பன்னாள் அழைப்பொழியான் என்று எதிர்ப்படுமே"4 என்றும், இறக்குங் காலத்து நமன் தூதர் போந்து என்னை நலிந்து என் உயிரைக் கொண்டு போங்காலத்து எனக்கு அருள் செய்யலாம் என்பது, இறைவனே, நின் திருவுள்ளமாக இருக்கலாம் ; அதற்கு முன்பே நீ போந்து என் நெஞ்சில் நின் திருவடியை எழுதி வைப்பாயாக செம்மை திறம்பாத- ______________________________ 1. திருநா. 75 9, 2. திருநா. 77:10. 3. ஷ 114 : 11. 4. ஷ 113: 9.

SIV–10