பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

{{|146left|சைவ இலக்கியவரலாறு}}


சிவக்கொழுந்தே என்றும், அப்போது நீ அருளுவதை யாவர் அறிவார் ? என்பார், ' "வெம்மை கமன் தமர்மிக்கு

   விரவி இழுப்பதன் முன்.     
  இம்மையுன் தாள் என்றன்.       
   நெஞ்சத்து எழுதிவை 
    ஈங்கு இகழில்,
  அம்மை அடியேற்கு அருளுதிர்
   என்பது இங்கு ஆர்.அறிவார் 
? செம்மை தரும் சத்தி முற்றத்து
  உறையும் சிவக்கொழுந்தே1 

என்றும் பாடுவன பலவாகும்.

இவ்வண்ணம் இறைவன்பால் இன்பவுரையாடி மகிழும் நாவரசர், மக்களுக்கு யாக்கை நிலையாமை, இளமை நிலை யாமை, செல்வநிலையாமை முதலிய பல நிலையாமைகளை யும் பரக்க எடுத்தோதி அறிவு கொளுத்துவதோடு, இறைவன் திருவருளாகிய செல்வமும் அது பெற்றுவாழும் வாழ்வுமே இன்றியமையாதன என்பதை ஆங்காங்கு எடுத்தோதுகின்றார். பொருளிலாதபோது ஒருவர்க்கு உறவாய்நின்று உதவும் மக்கள் இலராவது இயற்கை. பொரு ளிலாரும் இறைவன் அருட்பேறு குறித்துப் பாடுவாராயின் இம்மையேயன்றி அம்மையிலும் அவர் இன்ப வாழ்வில் இருத்தப்பெறுவர் என்பாராய்,

"மாடுதானது இல்லெனின்

மானுடர்

பாடுதான் செல்வாரில்லை, பன் மாலையால் கூட நீர் சென்று கொண்டீச்சரவனைப் பாடுமின் பரலோகத் திருத்துமே '3 என்றும், சுற்றமும் துணையும் பெற்ற மக்களுமாகிய தொடர்பற்றாரை உலகியல் விரும்புவதில்லை. "அற்றாரைத் ______________________________ 1. திருநா. 97 : 6. - 2. திருநா 153 : 5.

  குறைவிலோம் கொடு மானுட 
  வாழ்க்கையால், 
  கறைநிலாவிய கண்டன் எண் 
  தோளினன்...இறைவன் 
  நீள்கழல் ஏத்தியிருக்கிலே.' |

3. ஷ. 184 : 3.