பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/164

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
சைவ இலக்கியவரலாறு



இறைவன் அருட் செயல்களாகப் புராணங்களிற் கூறப்படும் செய்திகள் பல திருநாவுக்கரசர் காலத்தே தமிழகத்தில் நிலவியிருந்தன. அவற்றையும் திருநாவுக்கரசர் தாம் பாடிய திருப்பாட்டுக்களில் தொகுத்துப் பாடியிருக்கின்றார். மார்க்கண்டன் பொருட்டு இறைவன் காலனை வீழ்த்தியதும்1, கண்ணன் தன் கண்ணையிடந்து அருச்சித்து ஆழிப்படை பெற்றதும்2, அருச்சுனன் பொருட்டு இறைவன் வேடுவனாய்ச் சென்றதும்3, பகீரதன் பொருட்டுக் கங்கையைத் தாங்கியதும்4, திரியும்புரம் மூன்றையும் எரித்ததும்5, வியாக்கிரபாதன் மகன் உபமன்னியுவுக்குப் பாற்கடலை அளித்ததும்6, அயன்தலை ஐந்தனுள் ஒன்றை அறுத்ததும்7, தருமிக்குப் பொற்கிழி அளித்ததும்8, அகத்தியன் பொருட்டு இறைவன் பொதியிற்கு எழுந்தருளியதும்9, ஆலின் கீழிருந்து நால்வர்க்கு ஆகமப் பொருளைஅருளியதும்10, திருமறைக் காட்டில் விளக்கெரியத் தூண்டிய எலியை மறுபிறப்பில் மாவலி மன்னனாகப் பிறப்பித்ததும்11, இராவணனைக் கயிலைமலையின் கீழ்ப்பட அடர்த்ததும் பிறவும் திருநாவுக்கரசரால் இனிது குறிக்கப்படுகின்றன. இவற்றுள் இராவணனை அடர்த்த செய்தி மாத்திரம் ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் திருக் கடைக்காப்பாகக் குறிக்கப்படுகிறது. தொடக்கத்தில் பிணக்கம் செய்து, பின்பு அருட்பேறு கருதி இறைவற்கு வணக்கஞ் செய்து வாழ்வு பெற்ற இராவணன் போலத் தாம் தொடக்கத்திற் புறச்சமயம் புக்கு நின்று பிணங்கிப் பின்பு சூலையால் ஆட்கொள்ளப்பட்டமையின், திருநாவுக்கரசர் இராவணன் வரலாறு குறிப்பதையே திருக்கடைக் காப்பாகக் கொண்டு ஓதுவாராயினர் ; இதனைச் சேக் கிழாரும் "அத் தன்மையனான இராவணனுக்கு அருளும்- ______________________________

1.திருநா. 49 : 2, 65. 108, 2. 
2. திருநா. 56 : 6; 64: 8. 3.   
3.     ஷ 65 : 4,
4.     ஷ65 : 7. 
5.     ஷ 114 : 3.
6.     ஷ 170 : 6.
7.     ஷ  264; 10.
8.     ஷ. 290 : 3.
9.     ஷ 264 : 3, 

I0. ஷ 177: 10 11. ஷ 49.: 8