பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
158


தோன்றிய தொன்மையுடைய தென்பது கருதத்தக்கது. திருநாவுக்கரசர் காலத்தில் இவ்வூர் கல்விநலம் சிறந்திருந் தமை தோன்ற, "ஓதல் ஒவா ஒளிதிகழும் ஒற்றியூர்"1என்று இயம்புகின்றார். அந்நாளிற் பல்லவர்க்குத் தலை நகராக விளங்கிய காஞ்சிமாநகரம் கல்விக் கடிகையொன்றால் கலைவளம் பெருக்கிய திறத்தை வரலாற்று நூல்கள் காட்டுகின்றன.2 அக்காஞ்சிமா நகரைப் பாடுமிடத்துத் திருநாவுக்கரசர் கல்வியைக் "கரையிலாதகாஞ்சிமாநகர்"3 என்பது பொருத்தமாக இருக்கிறது. திருக்காளத்திக்குச் சென்றபோது அங்கே இறைவனைத் "தேனார்ந்து உக்க ஞானப்பூங்கோதையாள் பாகத்தான் காண் நம்பன் காண் ஞானத்தொளியானான்காண்"' என்று பாடியருளினாராக, அங்குள்ள இறைவிக்கு ஞானப் பூங்கோதை யென்பதே திருப் பெயராகக் கல்வெட்டுக்களிலும் நூல்களிலும் வழங்கி வருகின்றது.

4. திருப்புகலூர்.

திருநாவுக்கரசர் இறுதிக் காலத்தில் தங்கிய திருப்பதி இதுவே யாகும். இது நெய்தல் திணையில் புன்னை மரங்கள் செறிந்து இனிய காட்சி வழங்கும் அழகிய ஊராகும். பூம்புகார், பூந்தராய் என்றாற் போல இவ்வூரும் பூம்புகலூர் எனப்படுவதே இதன் இயற்கை நலத்தைப் புலப்படுத்தா நிற்கும். இதனைத் திருஞான சம்பந்தர் புள்தன் பெடையோடு ஆடும் பூம்புகலூர் ' என்பர் . திருநாவுக் கரசர் " பூம்புகலூர் மேவிய புண்ணியனே "' என்பர். திரு நாவுக்கரசரால் புன்னைப் பொழில் புகலூர் புன்னைக் கானற் பொழிற் புகலூர்' என இப்புகலூரது புன்னைப் பொழில்வளம் புகழப்படுவது காணலாம். இங்குள்ள இறைவனை நம் நாவரசர், கோணப்பிரான் எனக் குறித்து, ¥_____________________________

1. திருநா. 259 : 3.
2. Dr. C. Minakshi's 
 Administration and Social 
 life under the Pallavas. pp. 
 186-197.  
3. திருநா.   43: 8,
4.    ஷ  .  222:19,
5. திருஞான.228 : 1.
6. திருநா.   313 : 1. .
7. திருநா.   106; 1, 4.