பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
160

 இப்படி யிருப்பானே எனத் தம் சிற்றறிவிற் கண்ட வற்றைக் காட்டிப் பிணங்கி நின்றாராக, அவர்களைக் கண்ட திருநாவுக்கரசர், அவர் செய்கை, "கடலாமையைப்பார்த்த குளத்துயாமை நீ பரவும் கடல் எம் குளத்துக்கு நிகராமோ?” என்பதுபோல்கின்ற தென்பாராய்,

"கூவலாமை குரைகடல்

  ஆமையைக்
கூவலோடு ஒக்குமோ கடல் 
  என்றல்போல்
பாவகாரிகள் பார்ப்பரிது 
   என்பரால் 
தேவதேவன் சிவன் 
   பெருந்தன்மையே "'1

என்றும் கூறுவர். தாம் சமணரொடு கூடிநின்று உண்மை நெறியுணராது உழன்ற திறத்தை,

"அமணொடு இசைவித்து.எனக் கொத்தைக்கு மூங்கை வழிகாட்டுவித்து என்னைக் கோகு செய்தாய்"2 எனவும், சிவநெறிதேராது புறச்சமயத்தே ஒதுங்கியிருந்த தம் நிலைமையை விளக்கற்கு, ஆரூரர் தம்முன்பிருக்கும்விதியின்றி "முயல்விட்டுக்காக்கையின்பின்போனவாறே" 3எனவும், ஆரூரில் வார்தேனை வாய்மடுத்துப் பருகியுய்யும் விதியின்றி மதியிலியேன் விளக்கிருக்க மின்மினித் தீக் காய்ந்தவாறே"4 எனவும் கூறிச் சைவவாழ்வில் தாம் கவலையின்றி இனிது இருக்கும் இயல்பு தோன்ற, "எங்கு எழில் என்ஞாயிறு"5 எனவும் இவை போல்வன பலவும் கூறுமாற்றால் பழமொழிகள் மிகப்பல இவர் திருப்பாட்டுக்களில் காணப்படுகின்றன.
இனி, இத்திருப்பதிகங்களால் அந்நாளில் இறைவனுக்குத் திருக்குறுக்கையில் அட்டமி விழாவும், திருவாரூரில் திருவாதிரை விழாவும், திருவொற்றியூரில் உத்திர விழா வும் நடந்த செய்திகள்விளக்கமுறுகின்றன. திருக்குடந்தையில் உள்ள தீர்த்தம் புண்ணிய நதியேழும் கொண்டது. என்பதை, "தாவிமுதற்காவிரிநல் யமுனை கங்கை சரசுவதி பொற்றாமரை புட்கரணி தெண்ணீர்க், கோவியொடு-

___________________________

1. திருநா. 214: 5.
2. திருநா. 99 : 2. 
3.  ஷ-     5 : 2.
4. .ஷ      5 : 7.
5.  ஷ-    309: 2.