பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:162

I62 சைவ இலக்கிய வரலாறு

இருப்பதாகத் தெரியவில்லை; தென் குமரியே கருத்தாயின் "கொங்குதார்க் குமரி யென்பது கொங்கு தென்குமரி' என்று பாடமாயிற்றாதல் வேண்டும் என்பவரும் உண்டு : அங்ஙனம் ஒரு பாட வேறுபாடு காணப்படாமை ஈண்டுக் கருதத்தக்கது.

சமயநெறி பற்றிய வழக்கங்கள் சில இவருடைய திருப் பதிகங்களில் தெரிகின்றன. சிவனடியார்களைஆட்கொள்ளு மிடத்து அவர்கள் தலையில் பால் தெளித்து 1தீர்த்தநீராட்டுவதும், சென்னியைத் திருவடியால் தீண்டுவதும் வழக்கமாக இருந்திருக்கின்றன. சென்னியைத் திருவடியால் தீண்டுவது பிற்காலத்தே திருவடி தீக்கையெனப்படுவதாயிற்று. சிவனடியார்கட்குச் சூலக்குறி இடபக்குறி பொறித்தலும் அக்காலத்தே இருந்திருக்கிறது; இதனைத் திருத்தூங்கானைமாடத்தில் திருநாவுக்கரசர் தன்மேற்சூலக் குறிபொறித்தல் வேண்டுமென இறைவன்பால் விண்ணப்பம்2 செய்துகோடலால் தெளியக்காண்கின்றோம். இவ் வழக்கம் பின்பு பதினொன்று பன்னிரண்டாம் நூற்றாண் டளவில், திருக்கோயிலிற் பணி புரிந்த அடியார்கள் இடையேயும் இருந்திருக்கிறது. தீக்காலிவல்லத்துத் திருக் கோயிலிற் பணிபுரிந்த தேவரடியார்க்ட்குச்சூலக்குறி இடப் பட்டதென அக்கோயிற் கல்வெட்டொன்று3 கூறுகிறது. இவ்வாறே திருமால் அடியார்களுட் சிலர் இக்காலத்தும் சங்கும் சக்கரமும் இரு தோளிலும் பொறித்துக்கொள்வது ஈண்டு நினைவு கூரத்தக்கதாம்.

அரிய சொல்லாட்சிகள்

பல்லாயிரக் கணக்கில் படிக்குந்தோறும் பேரின்பம் சுரக்கும் பண்சுமந்த பாடல்களைப்பாடியருளிய திரு காவுக்கரசருடைய திருப்பாட்டுக்களில் அரிய இனிய சொல்லாட்சிகள் தோன்றி இன்பம் செய்கின்றன. இறை- ______________________________ 1. திருநா. 5 : 4. 2. திருநா. 110 : 1. 3. A. R. No. 230 of 1921. 49th

 regnal year of Kulottunga 
 the First.