பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:166


கூறுவது காண்க. இதனை நம் திருநாவுக்கரசர், நயந்தெடுத்து, "வாராவுலகு அருள வல்லான்றன்னை"1 என்று மொழிந்து இன்புறுகின்றார், அதியமான் தந்த நெல்லிக் கனியை, யுண்ட ஒளவையார். சாதல் நீங்க எமக்கு ஈத்த மையின், நீலமணி மிடற்றனாகிய இறைவன் சாதற்குக் காரணமாகிய நஞ்சுண்டும் நிலைபெற்று இருந்தாற் போல நீயும் சாவாதிருத்தல் வேண்டும் ' என்பராய், " போடு திருவின் பொலந்தார் அஞ்சி, பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி, நீலமணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும நீயே 2 என்றாராக, இதன்கண்,இறை வன் நஞ்சுண்டும் இறவாது நிலைபேறு உடையனாதலும், நஞ்சுண்ணாது அமுதுண்ட விண்ணோர் சாதல் நீங்காமை யும் குறிப்பால் விளங்குதல் கண்ட இளங்கோவடிகள், "விண்ணோர் அமுதுண்டும் சாவ, ஒருவரும் உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய்"3என்று எடுத்தோதினர். அதன் நயங்கண்ட நம் நாவரசர்,"தீதாய் வந்த நஞ்சு அமுது செய்தானை அமுதமுண்ட மற்று அமரர் உலந்தாலும் உலவாதானை"4' எனப் பரிந்து பாடிப் பரவுகினறார். இனி, தொல்காப்பியத்துக்குப் பாயிரம் வழங்கிய பனம்பாரனார், தொல்காப்பியரை "ஐந்திரம் நிறைந்த தொல் காப்பியன்" என்று குறிக்கின்றார். இப்பகுதிக்கு உரை கண்ட இடைக்காலச் சான்றோர் பலரும், ஐந்திரமாவது இந்திரனாற் செய்யப்பட்டதோர் இலக்கணம் என்று கூறுகின்றனர். இவ்வாறே சிலப்பதிகாரத்துக்கு அரும்பத உரை கண்ட சான்றோர், "புண்ணிய சரவணம் பொருந்து விராயின், விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவிர்"5 என வருமிடத்து விழுநூலாவது ஐந்திர வியாகரணம் என்று கூறுகின்றார். இவ்வாற்றால் பண்டை நாளில் ஐந்திரம் என்ற பெயரால் இலக்கணமொன்று இருந்தமை- ______________________________

1. திருநா. 217 : 2. 
2. புறம்.    91.
3. சிலப்.    12  "வம்பலர்". '
4. திருநா.  264 : 5.
5. சிலப்.   11:9, 89,