பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:172



கோயில் தேவராயன் பேட்டை யென வழங்கும் திருச்சேலூர் முதலிய இடங்கள் பலவற்றிலும் கோயில் கொண் டிருந்த திருநாவுக்கரசர்க்கு வழிபாடு நடத்தற்கு நிவந்தங்கள் பல ஏற்படுத்தப்பட்டுள்ளன. பல திருக்கோயில்களில் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாக்களுள் தொடக்க விழா திருநாவுக்கரசர் திருவிழாவாக இருந்திருக்கிறதென்று தீர்த்தநகரி யென வழங்கும் திருத்தினை நகர்க்கோயில் கல்வெட்டால்? அறிகின்றோம். திருநெல்வேலி மாவட்டத்து ஆற்றூர்க் கோயில் கல்வெட்டொன்று திருநாவுக்கரசுக்குத் திருவிழாச் செய்தற்கு வேண்டும் ஏற் பாட்டைச் செய்கின்றது.

இவ்வண்ணம் நன் மக்களால் சிறப்பும் பூசனையும் செய்து வழிபடப் பெற்ற திருநாவுக்கரசரை அவர் வாழ்ந்த காலத்தே வழிபடு கடவுளாகப் பேணி வழிபட்டுய்ந்த அந்தணர் பெருமானாகிய அப்பூதியடிகளைப் போலவே,முதல் இராசராசன் காலத்தில் திருப்புகலூரில் அங்கி குமர கிரம வித்தனான பொற்கோயில் சண்டேசுர் யோகியென்னும் அந்தணர், "திருநாவுக்கரைய தேவர்க்கு உச்சியிலும் இரவிலும் போனகம் படைத்தற்கு நெல்லும் காசும் தந்து வழிபட்டிருக்கின்றார்: - . இனி, திருநாவுக்கரசர் பெயரால் திருமடங்கள் நம் தமிழகத்தில் பல இடங்களில் இருந்திருக்கின்றன. திருவீழி மிழலையில் திருநாவுக்கரசர் மடமெனவும், திருப்பாற் றுறையில் திருநாவுக்கரசுதேவன் மடமெனவும், திரு. விளச்சேரியில் திருநாவுக்கரசு மடமெனவும், சேரமாதேவியில் திருநாவுக்கரசர் மடமெனவும் திரிபுவனையில் திருநாவுக்கரசு மடமெனவும் திருவதிகையில் திருநாவுக்கரைச தேவர் மடமெனவும், பெரிச்சி கோயிலில் திருநாவுக்- ______________________________ 1. A. R. 278 of 1923. 2, A. R. 121 of 1904. 3. A. R. 456 of 1930. 4. A. R. 68 of 1928. 5. A. R. 402 of 1908, 6 6. 583 of 1908, 7. 303 of 1911. 8. 653 of 1916. 9. 203 of 1919, 10. A. R.382 of1921 .