பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

175

திருநாவுக்கரசர்

 பதினாறாம் நூற்றாண்டில் பிரான்மலையிலிருந்த மடமொன் றில் 1திருநாவுக்கரசு பண்டாரமென ஒருவர்சிறந்திருந்தார்.இவ்வண்ணம் திருநாவுக்கரசர்க்குத் திருக்கோயில் எடுப்பித்தும் சிறப்பும் பூசனையும் செவ்வனம் செய்தும் திரு மண்டபம், திருமடம், திருவீதி முதலியன அமைத்தும் திரு நாவுக்கரசரை வழிபட்ட இடைக்கால நன்மக்கள், அவர் வழங்கிய திருத்தாண்டகங்களை ஓதுதற்கென்றே 2நிவந்தங்கள் விட்டனர். திருக்குறுக்கை வீரட்டத்தில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் திருநாவுக்கரசு அருளிய திருத்தாண்டகம் ஓதுதற்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இங்ஙனமே திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்களுட் காணப்படும் அரிய சொற்றொடர்கள் பல இறைவனுக்கும் இறைவிக்கும் மக்கட்கும் பெயராக வைத்துச் சிறப்பிக்கப் பெற்றுள்ளன. திருப்பாதிரிப்புலியூரில் இறைவனை, "தோன்றாத் துணையாயிருந்தனன் தன் னடியோங்களுக்கே" 3என்று பாடினாராக, அவ்வூர்க்கல்வெட்டு, இறை வசீனத் "தோன்றாத் துணையாளுடையார் "4' என்றும், திருச்செம்பொன்பள்ளியில் இறைவனைப் பாடுங்கால், "தெருவெலாம் உழல்வார்செம்பொன் பள்ளியார்,ஒருவர்தாம் பல பேருளர்காண்மினே"5என்று குறித்தாராக, அவ்வூர்க்கல்வெட்டு அவரைத் தெருவெலாம் உழல்வார் நாயனார் 6என்றும் குறிக்கின்றன. நாவரசர் திருநாகைக் காரோணம் சென்று இறைவனைப் பாடுங்கால் "கற்றார் பயில் கடல் நாகைக்காரோணத்து எம் கண்ணுதலே, வில் தாங்கிய கரம் வேல்நெடுங் கண்ணி வியன்கரமே" 7என்று பாடினர்; இடைக்காலத்தார் மகளிரை வேனெடுங்கண்ணி யென்று பெயரிட்டு வழங்குவாராயினர்; "இதனை இவன் தங்கை வேல் நெடுங்கண்ணி "8 எனவரும் கல்வெட்டால் அறியலாம். திருச்சாய்க்காட்டில் இறைவனைப் பாடலுற்ற- ______________________________

1. A. R. 199 of 1924. 
2. A. R. 219 of 1917.
3. திருநா. 94: 1.
4. S. I. l. Vol.VII. No. 741. 
5.    ஷ   149 : 4. 
6. A. R. 171 of 1925.
7.  ஷ 104 : 2
8. S. I. I. Vol. VIII. No. 
   497.