பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:184



விளைவியாது என்ற கருத்தமைய நிற்பது.1 இவ்வாறு இறைவன் திருப்புகழ் பாடக்கேட்கும் செயலைச் சிறப்பித்ததனால் இவர்க்குப் பின், தமிழ்நாட்டுக் கோயில்களில் மூவர் முதலிகள் அருளிய திருமுறைகளை ஓதும் மரபு உளதாயிற்று. மேலும், இவர்க்கு முன்னிருந்த பல்லவ வேந்தர் பலரும் வேதம் ஓதுதற்குக் கோயில்களில் நிவந்தங்களும், வேதம் ஓதுபவர்கட்கு இறையிலியாக நிலங்களும் ஊர்களும் வழங்கினரேயன்றித் திருமுறைகளை ஓதுதற்கு ஏற்பாடு ஒன்றும் செய்யாமையே இதற்குப் போதிய சான்றுபகரு கிறது. சேக்கிழாரும் "வடநூல் தென்தமிழ் முதலாம் பன்னுகலை பணி செய்யப் பாரளிப்பார் ”2 என்பது இதனை வலியுறுத்துகிறது.

இவர் பாடிய திருப்பதிகளுள் குடந்தையென்பது கும்பகோணம். இது பழைய நூல்களிலும் கல்வெட்டுக்களிலும் குடமூக்கில் எனவும் குடமுக்கு எனவும் வழங்கும். இது திருநாவுக்கரசராலும்3 பாடப் பெறும் சிறப்புப் பெற்றது; இப்போது நாகேச்சுரம் என வழங்குகிறது. திருமுறைகள் இதனைக் குடந்தைக் கீழ்க்கோட்டமென்று வழங்குகின்றன. திருத்துருத்தி இப்போது குற்றாலம் என வழங்குகிறது. இது, திருமுறைகளில் திருத்துருத்தி4 யெனவும், கல்வெட்டுக்களில் வீங்குநீர்த் துருத்தி5 யெனவும் கூறப்படுகிறது. திருவிடைவாயென்பது இப்போது திருவிடைவயல் என வழங்கும் ஊராகும். இதனைக் கல்வெட் டுக்கள் திருவிடைவாயில்6என்று குறிக்கின்றன. திரு ஞானசம்பந்தர் இதனை "விடைவாய் "என7 வழங்குவர். யாண்டவாய் என்னும் ஆற்றின் கரையில் இருப்பது பற்றி ஐயடிகள், இதனைப் பாண்டவாய்த் தென்னிடை வாய்8' என்று சிறப்பிக்கின்றார். ஐயடிகள் கூறும் குழித்தண்டலை இப்போது குளித்தலையென _____________________________

1க்ஷேத்திரத் திருவெண்பா. 23,
2 ஐயடிகள், புரா. 3. 
3.திருநா. 289.
4 திருஞா 234;திருநா.42.சுந்.74
5 A. R. No. 99 - 107 of 1926. .6 A. R. No. 12 of 1918.
7 திருஞான. 384.
8. க்ஷேத்தி. 7.