பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:188


-ரும் தமக்கு வழிவழியாக அடிமைப்பணி செய்யும் கடமை யுடையர் என்பதை ஆவணம் காட்டி நிறுவினர். அவையினர், வேதியர் இருக்கும் இடத்தைக் காட்டுமாறு கேட்க அனைவரும் பின்தொடரச் சென்று திருக்கோயிலுள் அவர் புகுந்து மறைந்தார். திகைத்துகின்ற அக்கூட்டத்திடையே நம்பியாரூரர் காண இறைவன் காட்சி தந்து சிறப்பித்தருளினர். நம்பியாரூரர் உடனே இறைவனை இனிய பாட் டுக்களாற் பாடத் தொடங்கினர். யாவரும் மருண்டு கையற்று அகன்றனர். "பித்தாபிறைசூடி" எனத் தொடங்கிப்பாடிய அத்திருப்பதிகத்தின்கண், நம்பியாரூரர் தான் இறைவனுக்கு வழிவழியாக அடிமையே என்பதை - எடுத்தோதி இன்புற்றார். வழக்கு நிகழும்போது அவர் வன் மொழிகள் பல வழங்கியது பற்றி வன்றொண்டர் என்ற பெயரும் அவர்க்கு எய்துவதாயிற்று. -

 நம்பியாரூரர் அன்று முதலே பிறந்த மனத்தொடர்பு நீங்கி இறைவன் எழுந்தருளும் திருக்கோயில்கட்குச் சென்று திருப்பதிகம் பாடுவதையே திருப்பணியாகக் கொண்டார். அதனால், அவர் அங்கிருந்து திருகாவலூர், திருத்துறையூர் முதலிய திருப்பதிகளை வணங்கிப் பரவிக் கொண்டு, திருநாவுக்கரசர் சூலை நோயின் நீங்கி உய்தி பெற்றுயர்ந்த திருவதிகை நோக்கி வந்தார் வருகையில், வழியில் சித்தவட மடத்தில்தங்கினர். அன்றிரவு இறைவன் முதுவேதியர் ஒருவர் உருவில் வந்து அவர்க்குத் திருவடி தீக்கை செய்து மறைந்தார். அதனைத்தெளிந்த நம்பியாரூரர் "கறைகொண்ட கண்டத்து எம்மான் தன் அடிக் கொண்டு என் முடிமேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்...இறை போதும் இகழ்வன் போல் யானே"1 என்பது முதலிய பலவற்றை இனிய திருப்பாட்டுக்களால் எடுத்திசைத்து இறைவனைப் பரவினார். இவ்வாறு திருப்பதிகம்பாடும் பணிசெய்துவரும் நம்பியாரூரர், திருமாணிகுழி, திருத்தினைநகர் முதலிய திருப்பதிகளை வணங்கிக்கொண்டு தில்லையை யடைந்து-

______________________________ 1. சுந்த. 38 : 1.