பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

சைவ இலக்கிய வரலாறு

மனையே என்றும், எனவே அவனது ஆட்சிக்காலம் கி. பி. 690-க்கும் 710-க்கும் இடைப்பட்டதாகலின் சுந்தரமூர்த்திகளும் அக்காலத்தில் வாழ்ந்தவராதல் வேண்டும்; எனவே நம் சுந்தரமூர்த்திகள் கி. பி. ஏழாம் நூற்றண்டின் இறுதியிலும் எட்டாம் நூற்ருண்டின் தொடக்கத்திலும் நம் தமிழகத்தில் வாழ்ந்தருளிய பெரியார் என்பது வெளியாதல் காண்க[1] என்பர்.

இனி, திரு. T. A. கோபிநாத ராயர் அவர்களும் தஞ்சை ராவ்பகதூர் திரு. K. S. சீனிவாச பிள்ளையவர்களும் நம்பியாரூரர் ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர் என்று கூறினர். இதற்கு அவர்கள் இரண்டு கருத்துக்களை அடிப்படையாகக் காட்டினார். முதலாவது : பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்படி, நம்பியாரூரர் காலத்தவரான சேரமான் பெருமாள்பால் திருமுகப் பாசுரம் கொணர்ந்த பாணபத்திரன் காலத்தில் பாண்டி நாட்டு வேந்தன் வரகுணன் என்பானவன் ; அவன் ஒன்பதாம் நூற்றாண்டினன் என்பது. இதனை மறுத்துக் காட்டி வந்த திரு. பண்டாரத்தாரவர்கள், இப் பரஞ்சோதியார் கூற்று வரலாற்ருராய்ச்சிக்குக் கொள்ளப்படுவதாயின், அப்பரஞ்சோதியார், திருஞான சம்பந்தர்காலத்துக் கூன் பாண்டியனை சுந்தரபாண்டியனுக்குப் பத்துத் தலை முறை முந்தியவன் மாணிக்கவாசகர் காலத்து அரிமர்த் தன பாண்டியன் என்றும், அவனுக்கு நாற்பத்து மூன்று தலைமுறை முந்தியவன் வரகுணன் என்றும் கூறுகின்றார்: அதனால், திருஞான சம்பந்தர்க்கு ஆயிரத்தைஞ்னுற்றுத் தொண்ணுறு ஆண்டு முந்தியவர் நம்பியாரூரர் என்று முடிவதால் அவர் கூற்றுப் பொருந்துவதன்று என்பர்.

இரண்டாவது மண்ணுலகம் காவல்பூண்ட உரிமையார் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும் பெருமையார் ' என்னும் திருப்பாட்டால், அடிகள் காலத்தில் பல்லவரது ஆட்சி தளர்ச்சியுறத் தொடங்கிற்று அதனால் அன்னோர்க்குக் குறுநில மன்னர்கள்


  1. 1. தமிழ்ப் பொழில் vol. III. பக்.201.9