பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்பியாரூரர்

207

இனி, கச்சியாண்ட பல்லவவேந்தர் குடிவழியில் சிம்ம விஷ்ணு வழி, வீமவன்மன் வழியென இரண்டு வழிகள் இதுகாறும் நிகழ்ந்துள்ள பல்லவர் வரலாற்று ஆராய்ச்சியால் வெளியாகியிருக்கின்றன. அவற்றுள், விமவன்மன் குடிவழியில் சிங்கன் என்ற பெயரோடு இயைபுடையார் எவரும் இல்லை, சிம்மவிஷ்ணுவின் குடிவழியில் அச்சிம்ம விஷ்ணு உட்பட மூவர் உள்ளனர். அவர்கள் சிம்மவிஷ்ணுவும், முதன் மகேந்திரவன்மனை முதல் நரசிங்கவன்மனும் பரமேசுரவன்மன் மகனான இரண்டாம் நரசிங்கவன்மனுமாவர். சிம்ம விஷ்ணு, திருநாவுக்கரசர் காலத்தவனை முதல் மகேந்திரவன்மனுக்குத் தந்தையாதலால், நம்பியாரூரர் காலத்துக் கழற்சிங்களுதற்கு ஒவ்வான். மகேந்திரன் மகனை முதல் நரசிங்கவன்மன் கி. பி. 630-க்கும் 660-க்கும் இடையில் வாழ்ந்தவளுவன் ; இரண்டாம் நரசிங்கவன்மன் கி. பி. 680-க்கும் 710-க்கும் இடையில் வாழ்ந்தவன் ; இவ்விருவருள். ஒருவனையே கழற்சிங்கன்' என்னும் தொடர் குறித்தல் வேண்டும். முதல் நரசிங்கவன்மன் வாதாபிகொண்ட பல்லவமல்லன் எனப்படுவன்; திரு ஞானசம்பந்தர் காலத்தில் இருந்த சிறுத்தொண்ட நாயனரான பரஞ்சோதியாருடன் வாதாபியை எறிந்து வெற்றித் தூண் நாட்டியவன்; அவன் காலத்தே தான் மகாபலிபுரம் என்னும் மாமல்லபுரம் சிறப்புற்றது. ஆதலால், திருஞான சம்பந்தர்க்குக் காலத்தாற் பிற்பட்ட நம்பியாரூரர் தன் காலத்து வேந்தனாகக் குறிக்கும் கழற் சிங்கன் முதல் நரசிங்கவன் மனுதல் கூடாது. ஆகவே கழற்சிங்கன் என்பது, கி. பி. ஏழாம் நூற்ருண்டின் இறுதியிலும் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இருந்தவனை இரண்டாம் நரசிங்கவன்மனையே குறித்து நிற்பது இனிது தெளியப்படுகிறது இவனை. ஶ்ரீ சங்கரபக்தன், ஶ்ரீ ஆகமப்பிரியன், சிவ சூடாமணி என்று செப்பேடுகள் [1]புகழ்ந்தோதுவதும், இவனை அவை இராஜசிங்கன் ௸த்திரிய சிங்கன் என


  1. 1. S. I. I. Vol. I, No. 25 & 26. p. 14-8.