பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்பியாரூரர்

211

இனி, இவ்வுலகினையும், உலகில் நிலவும் உயிர்கட்குரிய உடம்பினையும், உடம்பிடை நின்று உலகில் உயிர்கள் செய்வன செய்து பெறுவனபெற்று, நுகர்வன நுகர்ந்து உய்திபெறற்கு வேண்டுவனவற்றையும் படைத்து அளிப்பதும் இறைவன் செயல்;[1] அதனால் அவனுக்கும் இவற்றுக்கும் உள்ள தொடர்பு படைப்பவனுக்கும் படைக்கப்படும் பொருட்குமுள்ள தொடர்பாதலால், அத்தொடர்பு விளங்க, "தாயும் தந்தை பல்லுயிர்க்கும் தாமேயாய தலைவனார்"[2] என்றும், "தந்தை தாய் உலகுக்கு"[3] என்றும் கூறுகின்றார்.

உலகிடை உடம்பொடு கூடிநின்று வாழ்வாங்கு வாழும் உயிர்களோடு உடனாய் நின்று பெறற்குரியவற்றைப் பெறுவித்து அவற்றின் பயனை நுகரப்பண்ணுவதும் இறைவனது அருட்செயலாகும். அது குறித்து, "நாக்கும் செவியும் கண்ணும் நீ" [4] "பீடைதிர அடியார்க்கருளும் பெருமான்"[5] "பரமானந்த வெள்ளம் பணிக்கும் நம்பி"[6] உலகத்தினுள் எவ்வுயிர்க்கும் நாதியன்”[7] என்று பலபடியாக உரைக்கின்றார். உலக வாழ்க்கையால் உய்திபெறச் சமைந்த உயிர்களின் அறிவு நெறிக்கு வேண்டும் கல்விக்கு வாயிலாகிய எழுத்தும், சொல்லும், பாட்டும், நூலும் கற்பித்து அறிவின்பம் நல்குபவனும் இறைவனே; அதனால் அவன், ஞானசிரியனாகவும் ஞானப் பொருளாகவும் விளங்குகின்றான் என்பர். இதனை, "எழுத்தொடு சொற்பொருள் எல்லாம் முன்கண்டான்"[8] "சொல்லும் பொருளுமாய்கின்றநம்பி"[9] "கற்ற கல்வியிலும் இனியான்"[10] என்று கூறுவதனால் அறியலாம். இவ்வாறு இறைவனால் இயம்பப் பெற்ற அருல் ஆகமம் எனப்படும். அவ்வுண்மையும் விளங்க, "அண்டர் தமக்கு ஆகம நூல் மொழியும் ஆதி [11]!"


  1. 1. சுக். தே. 38 : 7.
  2. 2. சுங், தே. 53:3.
  3. 3. ௸ 75:4
  4. 4. ௸ 4:7
  5. 5. ௸. 53:10
  6. 6. ௸ 97:1
  7. 7. ௸ 97:1
  8. 8. ௸ 96:7
  9. 9. ௸ 63:8
  10. 10.௸ 56:5
  11. 11. ௸ 84:8