பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்பியாரூரர்

213

அணிகொள் கொன்றை அடிகள் அடிசேரார்" [1]என்பர். அன்பர் நெஞ்சைத் தனக்கு இடமாகக் கொண்டு[2] அங்கே ஞானவொளி திகழ்ந்து[3] அவர்கட்கு உண்டாகும் துயர்களை![4] நீக்கியருள்கின்றான். அவ்வகையால் அவனது அருணலத்தைப் புகழ்ந்துபாடும் அன்பர்கள் பிரியாப் பேரன் பால் பிணிப்புற்று அப்பணியினையே செய்தொழுகுவார்கள்.[5] இறைவன் திருப்பெயர்களுள் சிறந்த நிறைமொழியாகவுள்ள "நமச்சிவாய" என்பதை இடையறாது சிந்தையிற் சிந்தித்தலும் நாவால் மொழிதலும் அவருடைய சீர்த்த செயல்களாகும். இறைவன்பால் அன்பு செய்யும் ஏனைப் பெருமக்களையும் இறைவனைப் போலவே கருதி அவர்களே வழிபடுவதும் இந்த மெய்யன்பர்களின் அன்புடைத் தொழில்.

இறைவன் அருளிய ஞானயோக நெறிகளை மேற்கொள்ளாத மக்களும் பலர். அவர்கள், உயிர்கட்கென இறைவன் உடம்பு முதல் உலகப் பொருள் ஈறாகவுள்ள பலவற்றையும் படைத்து உதவிய நன்றியை நினையாது, உடம்பு முதலியவற்றால் செய்வன செய்து பெறுவனபெற்று நுகருங்கால் எய்தும் இன்பத்துக்கே அடிமையாகி, அவ்வின்பத்தை நிலைபெற்ற ஒன்றாகக் கருதி யொழுகுவர்[6]." அவர்களும் உடம்பு முதலியவற்றின் நிலையாமை உணர்ந்து நிலைத்த இன்ப நிலையமாக இருக்கும் இறைவன் திருவடியை அடைதல் வேண்டும்என்ற அருள் உள்ளத்தால், பிறவித்துன்பம், உடல் நிலையாமை, செல்வ நிலையாமை முதலியவற்றைப் பலவகையாலும் எடுத்துப் பாடி நல்லறிவு கொளுத்துகின்றார். ' "தோற்றமுண்டேல் மரணமுண்டு ? [7]" "இன்பமுண்டேல் துன்பம் உண்டு" [8]"வாழ்வாவது மாயம் இது மண்ணுவது திண்ணம்"[9] "பொய்த்தன்மைத்தாய மாயப் போர்வையை மெய் என்று எண்ணும் வித்தகத் தாய


  1. 1. சுங், தே. 7 : 8.
  2. 2. சுங். தே. 12: 7
  3. 3. ௸ 23:9
  4. 4. ௸ 1:9
  5. 5. ௸ 2:7
  6. 6. ௸ 64:5
  7. 7. ௸ 7:2
  8. 8. ௸ 7:3
  9. 9. ௸ 7:1