பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

சைவ இலக்கிய வரலாறு

அக்காலத்தே இச்சமயம் எவ்வகையில் வேந்தர்களுடைய ஆதரவு பெற்றிருந்தது எனக்கூறுகின்றிலர். முதல் மகேந்திரன் காலத்துக்கு மிகமிகத் தொல்லோரான பல்லவ வேந்தர்களுட் சிலரும் களப்பிரரும் தமிழ் வேந்தரும் ஆகிய பண்டை வேந்தர்களின் அரசியலாதரவு இருந்திருக்க வேண்டும். புத்தவன்மன் என்பது முதலாக வரும் வேந்தர் பெயர்கள் இவ்வாறு நினைத்தற்கு இடந்தருகின்றன. அரசியலாதரவு இல்வழி, புதுச் சமயமொன்று நிலைபேறு கொள்வதென்பது எளிதன்று என்பது அக்காலநிலையினைக் காண்பார் இனிதறிவர். ஒரு காலத்தில் அரசியலாதரவு பெற்று நிலைபேறு கொண்ட புத்த சமயம், கி.பி. ஆறு ஏழாம் நூற்றாண்டுகளை எய்துதற்குள் தன் செல்வாக்கினை இழப்பதாயிற்று. அவருடைய சங்கங்கள் புத்த சமயக் கருத்துக்களை மாணவர்க்கு உரைப்பதும், அவர்கள் துணையாக நாட்டிற் புகுந்து நாட்டவர்க்குப் புத்த தருமத்தை விரித்துரைத்துப் பரப்புவதும் ஏனைச் சமயத்து அறிஞர்களோடு சொற்போர் செய்வதுமே அவர்க்ள் பெரும்பாலும் மேற்கொண்டிருந்த கொள்கைகளாகக் காணப்படுகின்றன. முடிவாக நோக்குமிடத்து நால்வர் கால்த்தின் தொடக்கத்தில் பெளத்த சங்கங்கள் மிகச் சிலவாகவும் புத்தர்களின் தொகை போதிய அளவு குறைவாகவும் இருந்தன என்ருெழிவது ஈண்டைக்கு அமைவதாம்.

இனி, அதனையடுத்துப் பேசப்படும் சமண் சமய நிலை யினைக் காண்பாம்.

சமண சமய நிலை

பெளத்த சமயம் போலச் சமண் சமயமும் தென்ன்னாட்டிற் புதிது புகுந்த வேற்றுச் சமயமாகும். இதன் வரலாறு கண்டவர், கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகார மணிமேகலைகளிற் காணப்படும் சமண சமயம், தன்னை யடுத்துவந்த மூன்று நான்காம் நூற்ருண்டுகளில் தன் வரலாறு தோன்றாதபடி யிருக்கிறதெனக்[1] கூறுகின்றனர். இதற்குக் காரணம் அக்காலத்தே


  1. 1. Studies in South Indian Jainism. p. 51.