பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:238


கவர்வான், புன்னைமலரும் புறவில் திகழும், தன்னை முன் னம் நினைக்கத் தருவான், உன்னப்படுவான் ஒற்றியூரே"1 [1]என்று பரிகின்றார் ; இவ்வாறே வேறொருத்தி, கிள்ளைபூவை முதலியவற்றை இறைவன்பால் தூதுவிடும் கருத்தை மேற்கொண்டு, "பறக்கும் எம் கிள்ளைகாள் பாடும் எம் பூவைகாள், அறக்கண் என்னத்தகும் அடிகள் ஆரூரரை, மறக்க கில்லாமையும் வளைகள் நில்லாமையும், உறக்க மில்லாமையும் உணர்த்தவல்லீர்களே"2[2]என்று வருந்துகின்றாள். <bநம்பியாரூரரும் கல்வெட்டுக்களும்b/> நம்பியாரூரருக்குரிய பெயர்களுள் ஆலாலசுந்தரர்,நாவலூருடையார், ஆரூரர், ஆளுடைய நம்பி, வன்றொண்டர்,தம்பிரான்தோழர், திருத்தொண்டத்தொகையார், சுந்தரப் பெருமாள், சேரமான் தோழர் என்பனமுதலியபெயர்கள் கல்வெட்டுக்களில்வழ்ங்குகின்றன.நம்பியாரூரர் மண்ணுலகில் வந்து தோன்றுதற்கு முன் திருக்கயிலாயத்தில் ஆலால சுந்தரராக விளங்கினார் என்ற வரலாறுபற்றி, ஆலாலசுந்தரர் எனச்சிறப்பித்து உரைக்கப்படுவதுண்டு. திருத்தொண்டர் வரலாறுரைத்த சேக்கிழார் "ஆலாலசுந்தரர்"3 [3] என்றுசிறப்பித்துஉரைக்கின்றார் திருநெல்வேலி மாவட்டத்துத் திருவாலீஸ்வரமென்னும் கோயிலில் ஆட்கொண்டநாயக மாணிக்கம் என்னும் தேவரடியாள் ஒருத்தி நம்பியாரூரரை ஆலால சுந்தர நாயனர் என்ற பெயரால் எழுந்தருள வைத்துப் பரவைநாச்சியார் திரு உருவத்தையும் உடன் எழுந்தருள்வித்தாள் என்று அங்குள்ள கல்வெட்டொன்று4 [4] கூறுகிறது. திருவரசிலியி லுள்ள இறைவனுக்கும் "உடையார் ஆலால சுந்தரநாயனர்"5 [5] என்றே பெயர் என அவ்வூர்க் கல்வெட்டால் அறிகின்றோம். ஆலால சுந்தரர் என்ற பெயரால் நந்த- ______________________________ 1. சுந். தே. 91 : 4. 2. சுந். தே. 37 : 2. 3. பெரியபு. திருநாவு. 11. 4. A. R. No. 345 of 1916. 5. S. I. I. Vol. VII. No. 819.

  1. சுந்.தே.91:4
  2. சுந்.தே.37:2
  3. பெரியபுராதிருநா.11
  4. A.R.No.345of1916
  5. S.I.I.Vol.No.of819