பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:244



கூறுகிறது. பின்பு கழறிற்றறிவாரான சேரமான் பெரு மாளுடன் நம்பியாரூரர் நட்புக்கொண்டு விளங்கிய சிறப்புக் குறித்து, சேரமான் தோழர் என்று அறிஞர்களால் பாராட்டப் பெற்றார். இதனைச் சேக்கிழார், "சேரர்பெருமானர் தாமும் வன்றொண்டரும் கலந்த, பான்மை நண்பால் சேரமான் தோழர் என்று பார்பரவும், மேன்மை நாமம் முனைப்பாடி வேந்தர்க்காகி விளங்கியது"1பிழை காட்டு: Closing </ref> missing for <ref> tagஎடுத்துரைக் கின்றன. நம்பியாரூரர்க்கு இங்கே கூறிய சிறப்புப் பெயர்களோடு சுந்தரர் என்ற பெயரும் உண்டு; இ.து இடைக் காலத்தே சுந்தரநாயனர்3 [1]என்றும், சுந்தர நாயகனர் என்றும் வழங்கிற்று பின்பு சுந்தரமூர்த்தி நாயனர் என்ற பெயர் தோன்றிற்று: அஃது இன்றுகாறும் வழங்கி வருகிறது. நம்பியாரூரருடைய தந்தையார் சடையனார் என்றும், தாயார் இசை ஞானியார் என்றும் அவர் வரலாறு கூறுகிறது : "நம்பியாரூரர் தாமே தம் தாய் தந்தையரை, நண்புடைய நன்சடையன் இசை ஞானி சிறுவன் நாவலர் கோன் ஆரூரன்"4[2]என்று குறித்தருளுவர். பண்டைநாளில் சடையன் என்னும் பெயர் மக்களிடையே பயில வழங்கிற்று. இசைஞானியார் திருவாரூர்க்கு அண்மையிலுள்ள கமலாபுரத்தில் வாழ்ந்த ஞான சிவாசாரியார்க்கு மகள் என்றும், அவர் கெளதம கோத்திரத்தவ ரென்றும் திருவாரூர்க் கல்வெட்டொன்று5[3] கூறுகிறது. நம்பியாரூரர் திருவாரூரில் மணந்து கொண்ட பரவையாரைக் கல்-

1. பெரியபு. கழறிற். 66.
2. S. I. I. Vol.V. No. 295; 
 S.I.I.Vol. VIII. No. 213;
  A. R. No. 87 of 1927-8;
  A. R. No. 306 of 1927–8.

.3 A. R. No. 236 of 1922.

4 , சுந். தே. 16:11.  

5 .S I.l.vol.Vll.No.485


  1. A.R.No236Of1922
  2. சுந் தே.16:11
  3. S.I.I.VolVII.No485