பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:246

 திருப்புத்தூரில் திருத்தொண்டத் தொகையான் திருமடம்1 என்றொருமடமும், திருவிடைவாயிலில் திருத்தொண் டத்தொகையான் திருக்குகை”2 எனக் குகையும் பிறவும் காட்டில் பலவிடங்களிலும் ஏற்படுத்தினர். இனி, நம்பியாரூரர் பாடியருளிய திருப்பதிகங்களில் காணப்படும் இனிய சொற்றொடர்களை இடைக்கால நன்மக்கள் எடுத்து உயரிய நெறியில் போற்றியிருத்தின்றனர். வெஞ்சமாக்கூடலில் இருக்கும் இறைவனை நம்பியாரூரர், விகிர்தா அடியேனேயும் வேண்டுதியே3" என்றும்,தேவியாரை, "பண்ணேர்மொழியாளையோர் பங்குடையாய்"4என்றும் பாடினர்; அவ்வூர்க் கல்வெட்டுக்கள் இறைவனை விகிர்தேச்சுரர்5 என்றும்,அம்மையைப் பண்ணேர் மொழியா6 ளென்றும் குறிக்கின்றன. திருத்துருத்தியிலுள்ள இறைவனை,"காவிரி யகன்கரையுறைவார்அடியிணைதொழுதெழும்.அன்பராம்அடியார்சொன்ன வாறறிவார் துருத்தியார்"7 என்று நம்பியாரூரர் பாடினராகக் கல்வெட்டுக்களும் திருத்துருத்தியுடையஇறைவனை,சொன்னவாறறிவார்8 என்று கூறுகின்றன. திருமழபாடியில் ஒரு பகுதிக்குப் பொன்னார்மேனி வளாகம் என்று அவ்வூர்க் கல்வெட்டொன்று9 கூறுகிறது; இது நம்பியாரூரர் திருமழபாடி இறைவனைப் பாடிய திருப்பதிகத்தின் தலைப்பாட்டிற் காணப்படும் தொடர். திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனை, "விடையின் மேல் வருவானை"10 என எடுத்து நம்பியாரூரர் பாடினர்; அத்தொடரையே செல்வரொருவர் தனக்குப் பெயராகக் கொண்டிருந்தார் என்பதைத் திருவோத்தூரிலுள்ள கல்வெட்டொன்று, "வைப்பூருடையான்தேவன் விடையின் மேல் வருவான்"11 என்று கூறுவதால் விளங்கு- ______________________

I. A. R. No. 104 of 1908; 
  180, 190, 192 of 1929.
2. A. R. No. 10 of 1918.
3. சுந். தே. 42 : 1-11.
4. சுந். தே. 42-4.
5. A. R. No. 147 of 1905.
6. A. R. No. 150 of 1905.
7. சுந், தே. 74 : 1.
8. A.R. No. 482 of 1907. 
9. S. I. I. Vol. V. No. 632. 
10 சுந் .தே. 86 :1. 
11. S.I.I.Vol.VII. No.97.