பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

சைவ இலக்கிய வரலாறு

தோய்ந்து விடுகின்றார்; அத்தோய்வினை, தான்பாடிய திருவந்தாதியின் தொடக்கத்தேயே புலப்படுத்தி, “தன்னைக்கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணமாகிய ஈசனுக்குப் பொன்வண்ணம் எவ்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்து இலங்கும்” [1]என்று பாடுகின்றார்.

இவ்வண்ணம் தம்மை மறந்து தில்லைக் கூத்தன் திருவருளில் தோய்ந்து அதன்வண்ணமாய் இயைந்து நிற்கும் சேரமான் திருவுள்ளத்தில் அத்திருவருளால் நம்பியாரூரரைக் காண்பது குறித்துப் போந்த நினைவு எழுகிறது. இறைவனைத் தன் பாட்டிசையில் ஈர்த்து நிறுத்தும் நாவன்மை படைத்த நாவலூராளிக்குச் சிவபோகப் பெரு வாழ்வு எய்துவது மிக எளிது; அவரைக் காணும் காட்சியால் அவரைச் சேர்ந்தொழுகும் சிறப்புடை நட்பின் பயனால் சிவபோகப் பெருவாழ்வு தமக்கு எய்து மென்பது ஒருதலை எனத்துணிகின்றார்; அத்துணிவை,

"மாயகன் மாமணிகண்டன் வளர்
சடையார்க்கு அடிமை
ஆயின. தொண்டர் துறக்கம்
பெறுவது சொல்லுடைத்தே :
காய்சின யானே வளரும்
கனகமலே யருகே
போயின காக்கையும் அன்றே
படைத்தது அப்பொன் வண்ணமே [2]

என்று வெளிப்படுக்கின்ருர்,

இத் திருவந்தாதியில் அதனைப் பாடிய காரணம், தன்னுடைய கருவிகரணங்களேத் திருத்தொண்டில் ஈடுபடுத்தல், உடல் வாழ்வின் உயர்வின்மை, தொண்டு செய்யும் முறை, தொண்டினே யேற்கும் இறைவனது அருமைநிலை, அம்மையப்பனாய் ஆண்டவன் எழுந்தருளும் திறம், அவன் அட்டமூர்த்தியாய் அமைதல், அகப்பொருள் துறைகள்,



  1. பொன் வண். 1.