பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

265

சேரமான்பெருமாள்

 என்ற கருத்தமைய, "அலையார் புனல் அனல் ஞாயிறு அவனி மதியம் விண்கால், தொலையா உயிர் உடம்பாகிய சோதி"[1]என்று தெரிவிக்கின்றார். இதனால் இறைவன் அட்டமூர்த்தியா யிருக்கும் திறமும் கூறப்பட்டமை உணரப்படுகிறது. இனி, இறைவன் இவ்வண்டமே தனக்குத் திருமேனி யாகக்கொண்டவன் என்ற ஓர் அழகிய கருத்தைப்

"பாதம் புவனி, கடர்நயனம், 
பவனம் உயிர்ப்பு, ஒங்கு
ஒதம் உடுக்கை,உயர்வான் முடி, 
விசும்பே உடம்பு, 

வேதம்முகம்,திசைதோள்,மிகுபன்மொழிகீதம்"2பிழை காட்டு: Closing </ref> missing for <ref> tagஎன்று இயம்புகின்றார்,

<bஇறைவன் அம்மையப்பன், மும்மூர்த்திb/>

இறைவன் நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன் என்பதும், அயன் அரிஅரன் என்ற மூன்று மூர்த்தமும் அவனே என்பதும் தொன்று தொட்டு நிலவிவரும் கருத்துக்கள். இவ்வாறு வரும் கருத்தை மேற்கொண்டு பரவும்சேரமான் அம்மையப்பனும் திருமூர்த்தத்தை, -

" வலந்தான் கழல் இடம்பாடகம்,

பாம்புவலம் இடமே
கலந்தான், 
வலம்நீறுஇடம்சாந்து,

எரிவலம் பந்து இடம், என்பு அலந்தார் வலம் இடம் ஆடகம், வேல்வலம் ஆழியிடம், சலம் தாழ் சடைவலம் தண்ணங் குழல் இடம் சங்கரற்கே" 4<ref> பொன்.வண்.65</ref&என்றும், மும்மூர்த்தியாம் இயல்பை,

1. பொன் வண். 15. 2. பொன் வண். 19.

3. ஷை 5. 4. டிை 65.


  1. பொன்.வண்.15