பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:266

 "வீரன் அயன் அரிவெற்பு அலர் நீர் எரி பொன்னெழிலார் கார்-ஒண் கடுக்கை கமலம் துழாய்விடை தொல் பறவை பேர் ஒண்பதி நிறம்தார் இவர் ஊர்தி வெவ்வேறு என்பரால் பாரும் அறியாவகை எங்கள் ஈசர் பரிசுகளே" 1[1] என்றும் இனிமையுறப் பாடிக் காட்டுகின்றார். இனி, இறைவன் அடியார்க்கு அருளும் திறத்தை, "உற்ற அடியார் உலகாள ஓர்

ஊனும் உறக்கும் இன்றிப் பெற்றமதாவது ஒன்று ஏறும் பிரான்” 2[2]என்றும்,"கள்ளவளாகம் கடிந்து அடிமைப்படக் கற்றவர் தம் உள்ள வளாகத்து உறுகின்ற உத்தமன்"3[3]என்றும் கூறி, அடியார் பொருட்டுத் தான் ஊணும் உறக்கமும் துறந்தொழிவதும், கள்ளம் கடிந்து தூய்மையுறும் அவர்கள் உள்ளம் மீளவும் கள்ளத்தால் களங்க மெய்தாமல் காக்கும் திருக்குறிப்பால் ஆங்கே உறைகின்றான் என்று அறிவுறுத்துகின்றார். இவ்வாறே திருஞானசம்பந்தர், "கள்ள நெஞ்ச வஞ்சகக் கருத்தை விட்டு அருத்தியோடு, உள்ளமொன்றி உள்குவார் உளத்துளான்"4[4]

.எனக் கூறுவது ஈண்டு நினைவு கூரத்தக்கது.:

இங்ஙனம் அடியவர் உள்ளத்தை மாசுபடுத்தும் அகப் பகைகளைக் களைந்து துணைபுரியும் இறைவன், புறத்தே கூற்று, பிணி முதலியவற்றுக்கும் தான் கூற்றும் மருந்துமாய்த் துணை செய்கின்றான் என்பார், சந்தித்த கூற்றுக்குக்கூற்றாம் பிணிக்குத் தனி மருந்தாம்"5[5] என்றும், அகத்தே நிற்குங்கால் சிந்திக்கும் சிந்தைக்குத் தேனும் அமுதமுமாய்த் தித்திப்பன் என்பார், " சிந்திக்கிற் சிந்தா மணியாகித் தித்தித்து அமுதமுமாம் "என்றும் இசைக் கினறார்.

1. பொன்வண். 95. 2. பொன்வண். 34. 3. ,ை 78. 4. திருஞான. 237; 6. 5. ை83.

  1. பொன் வண்.95
  2. பொன்.வண் 34
  3. பொன் வண்.78
  4. திருஞா.237:6
  5. திருஞா83