பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வார்ப்புரு:268

 திருவந்தாதியில் வருவன பலவும் அகத்திணை யல்லாதன. ஒருத்தி சிவபெருமானைக்கண்டு அவன்பால்கருத்திழந்து உடல்மெலிந்து வளைசோர்ந்து வருந்தி நிற்ப, அவளுடைய தோழி போந்து, "நீ இவ்வாறு வளையும் கலையும் இழந்து நிற்பது அறிவுடைமையன்று; இஃது என்ன போதம் ? இவற்கோ மணிநிறம் தோற்பது?"1[1] என்று கழறுகின்றாள்; அவள், தன்னால் பழியாவதும் பெண்மை நலம் போவதும் ஊழ்வினையால் வந்தன என்பாளாய், "ஆவன யாரே அழிக்க வல்லார் அமையாவுலகில், போவன யாரே பொதியகிற்பார்" என்றும், "தில்லைச் சிவனைத் திருந்தடி கைதொழுது தீவினையேன் இழந்தேன் கலையோடு செறி வளையே"2[2]என விடையிறுக்கின்றாள். இப்பகல் நிகழ்ச்சி அவளது நெஞ்சையலைப்ப, இரவில் சிறிது கண்ணயர்ந்து கனாக் காணலுற்றாள். கனவில் இறைவன் பலிவேண்டி வரத் தான் பலியிட்டு மேனி வேறுபடுவதாகவும் தாயர் தடுப்பதாகவும் தன்னை அப்போது இறைவன் வருக என அழைப்பதாகவும் உடனே தான் விழித்துக் கொண்டதாகவும் கண்டு வருந்தலுற்றாள். அவள் செயலை நம் சேரமான், - "ஈசனைக் காணப்பலி கொடுசெல்ல எற்றே இவள் ஒர் பேயனைக் காமுறு பிச்சிகொலாம் என்று பேதையர் முன் தாய் என ஈர்ப்பத் தமியேன் தளர அத் தாழ்சடையோன் வாஎனப் புல்ல என்றான் இமைவிண்டன. வாட்கண்களே"'3[3] என்று பாடிக் காட்டுகின்ருர். கனாக்கண்டு வருந்தும் மகள் நிலை கண்டு தாய் வருந்துவதும், இறைவன்பால் தோழியைத் தூது விடுவதும் பிறவுமாகிய கருத்துக்கள் நகறைந்த பாட்டுக்கள் பொன்வண்ணத் திருவந்தாதியில்

1. பொன் வண். 19. 2. :ை 84. 3. 62 ' ' -2.{{Rule}

  1. பொன். வண்.19
  2. பொன் வண் 84
  3. பொன் வண்.2