பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வார்ப்புரு:272

 என்ற பாட்டை நினைப்பிக்கின்றது. இவ்வாறே, "பட்டோர் பெயரும் ஆற்றலுமெழுதி, கட்ட கல்லும் மூதூர் நத்தமும், பரல்முரம் பதரும் அல்லது படுமறை, வரன்முறையறி யாவல் வெயிற் கானத்து"1'[1]என்ற மும்மணிக்கோவை, "ஆடவர், பெயரும் பீடும் எழுதி அதர்தொறும், பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் வேலூன்று பலகை வேற்று முனை கடுக்கும் வெருவருதகுந கானம்" 2[2]என்ற அகநானூற்றுப் பாடலையும்," "புனமயிற் சாயல் பூங்குழன் மடந்தை, மனமலிசெல்வம் மகிழாளாகி, ஏதில் ஒருவன் காதலனாக"3 [3]என்ற சேரமான் பாட்டு, "கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்"4[4]என்ற நற்றிணைப் பாட்டையும் நினைப்பிக்கின்றன.

<b3>. <bதிருக்கயிலாய ஞானவுலா/b>

இ.து ஆதியுலா என்றும் திருவுலாப் புறமென்றும் சான்றோர்களால் பாராட்டப்படுகின்றது. இதனை ஆதியுலா என்று கூறுவதை நோக்கின், தமிழ் இலக்கிய வகைகளுள் காணப்படும் உலாநூல்களுள் இதுவே மிகத்தொன்மையும் முதன்மையும் வாய்ந்தது என்பது துணியப்படும். இவ்வுலா எழுவதற்கு முன் தமிழில் தனிமுறையில் உலா நூல் ஒன்று இருந்தது எனத் துணிதற்குச் சான்று கிடைத்திலது. இப்போது காணப்படும் உலா நூல்களும் அவற்றின் நடை முறைகளும் இதனைப் பின்பற்றி நிற்பதோடு காலத்தால் பிற்பட்டுமே இருக்கின்றன.

இறைவன் செவ்விய கோலம் பூண்டு, தேவர் பலரும் சிறப்புடைய பல பணிகளைச் செய்துவர, அவர் வேண்டு. கோட்கு இசைந்து உலா வருங்கால், அவனைப் பேதை முதலாகப் பேரிளம் பெண்ணீறாக மகளிர் பலரும் கண்டு களிக்கின்றனர். அவர்கள் அனைவர்க்கும் அருள்நோக்கம் செய்து திருவுலா வந்து அமைகின்றான் சிவபெருமான் என்பது இதன் பிண்டித்த பொருளாகும்.

1. திரு. மும் ம. 16. 2. அகம். 131. 3. ஷை 16. 4. நற்றினே. 110.{{Rule

  1. திரு மும்ம.16
  2. அகம்.131
  3. திரு.மும்.16.
  4. நற்றிணை. 110