பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

273

சேரமான்பெருமாள்

 "திருமாலும் நான்முகனும் தேர்ந்துணரா தன்றங்கு அருமாலுறவழலாய் நின்ற-பெருமான் பிறவாதே தோன்றினான் காணாதே காண்பான் துறவாதே யாக்கை துறந்தான்- முறைமையால் ஆழாதே யாழ்ந்தான் அகலா தகலியான் ஊழா லுயராதே யோங்கினான்-சூழொளி நூல் ஒதா துணர்ந்தான் நுணுகாதே நுண்ணியான் யாது மணுகா தணுகியான்-ஆதி அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான் அரனாயழிப்பவனும் தானே-பரனாய தேவ ரறியாத தோற்றத்தான் தேவரைத்தான் மேவிய வாறே விதித்தமைத்தான்-ஒவாதே எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள் அவ்வுருவாய்த் தோன்றி அருள் கொடுப்பான்-எவ்வுருவும் தானேயாய் நின்றளிப்பான் தன்னிற் பிறிதுருவம் ஏனோர்க்கும் காண்பரிய எம்பெருமான்"1[1]

சிவலோகச் சிவபுரத்துத் திருக்கோயிலுள் வீற்றிருக்கின் றான். தேவர் பலரும் வந்து அவனை வணங்கி, "எங்கட்குக் காட்சியருள்க " என்று இரந்து கேட்கின்றனர். அவ் வேண்டுகோட்கு இறைவன் இசைந்தருளுதலும், அவனை யும் இறைவியையும் தேவர்களும் தேவமங்கையரும் முறையே ஒப்பனை செய்கின்றனர். இந்திரன் முதலிய தேவர்கள் தத்தம் தகுதிக்கேற்பச் சூழ்ந்து வருகின்றனர். முன் செல்வோர் முன் செல்ல, அருகு செல்வோர் அருகு செல்லத் திருவுலாத் தொடங்குகிறது. சல்லரி, தாளம், தகுணிச்சம் முதல் முருடு ஈறாகவுள்ள பல்வகை வாச்சியங் கள் முழங்குகின்றன. இருது, யோகம், தவம் முதலாக வுள்ள குணங்கட்குரிய அதிதேவதைகள் பலவும் வந்து, "இமையோர் பெருமானே

போற்றி எழில்சேர்
உமையாள் மணவாளா போற்றி- 
எமையாளும் தீயாடி போற்றி 
சிவனே யடிபோற்றி ஈசனே 
யெந்தாய் இறை போற்றி- 
தூயசீர்ச் சங்கரனே போற்றி 
சடாமகுடத்தாய் போற்றி 
பொங்கரவா பொன்னங்கழல் 
போற்றி-அங்கொருநாள்

1. ஞானவுலா, 1 : 8.

SfV–18


  1. ஞான உலா1:8