பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:278

 என்று பாடுகின்றார், மேலும், இறைவன் சடை தீப்போல இருப்பதும் அதன்கண் கங்கையும் பிறையும் பாம்பும் உறைவது கண்டு, "எரிகின்ற தீயொத்துள சடை யீசற்குஅத்திக்கு இமையோர் சொரிகின்ற பாற்கடல் போன்றது

சூழ் புனல் அப்புனலில்

சரிகின்ற திங்கள்ஓர்தோணியொக்கின்றதுஅத்தோணியுய்ப்பான், தெரிகின்ற திண் கழை போன்றுளதால்அத்திறல் அரவே"1.[1] என்று பாடுகின்றார். அதன்பின், அப்பாம்பையும் பிறையையும் பார்த்து இன்பவுரையாடி நம்மை மகிழ்வுறுத்துவார், பாம்பு நெருப்புயிர்க்குமென்றும், அதனால் அப்பிறை மேனி வெதும்பிக் கங்கையில் மூழ்கிக் குளிருமென்றும், உமாதேவியார் ஊடக்கண்டு உருகும் என்றும், இறைவன் தீண்டலால் கலைநிறைந்து மண்ணையும் விண்ணையும் விளக்கும் என்றும், இவ்வாறு இறைவன் முடிமேலிருந்தும் பிறைமதி இன்பமும் துன்பமும் எய்துகின்றது என்றும் கூறுகின்றார். இதனை,

"அரவம் உயிர்ப்பவழலும் அம் கங்கைவளாய்க்குளிரும் -

குரவங்குழலுமையூடற்குநைந்துருகும்அடைந்தோர் பரவும் புகழண்ணல் தீண்டலும் பாகவான்அவைவிளக்கும் விரவும் இடர் இன்பம் எம்மிறை குடியவெண்பிறையே" 2[2] என விளம்புகின்றார். முடிவில் இறைவனும் இறைவியும் கூடியிருக்கும் தோற்றம் கங்கையும் யமுனையும் கூடும் திரிவேணி சங்கமத்தை யொத்திருப்பதைக் காட்டுவது மிக்க இறும்பூது பயக்கின்றது. -

1. பொன். அந், 67. 2. ഞ്. €8.

  1. பொன்.அந்.67
  2. பொன் அந்.68