பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏனாதி சாத்தஞ்சாத்தனார்

 கிரிஸ்திரன் கீதிகின்னரன் கிருபாலயன் கிருதாபதானன். கலிப்பகை கண்டக நிஷ்டுரன் கார்யத கூகிணன் கார்முக பார்த்தன் பராந்தகன் பண்டித வத்சலன் பரிபூரணன் பாப பீரு குரையுறுகடம் படைத்தானைக் குணக் கிராகியன் கூடகிர்ணயன் நிறையுறு மலர் நீண் முடி நேரியர்கோன் நெடுஞ்சடையன்"1[1] என வரும் தொடர்கள் காட்டுகின்றன. இறுதியாக, இவர் சிவபெருமான்பால் சிறந்த அன்பு உடையவர் என்பதும் ஈண்டு நினைவு கூரத்தக்கது. இதனை அவர் வெளிப்படுத்தற்கு வாய்ப்பு அவர்க்கு இல்லையாயினும், அவரது சொன்னடை அதனை ஒரளவு தெரியப்படுத்துகிறது. நெடுஞ்சடையன் தந்தையாகிய தேர் மாறன் கொங்கு நாட்டைவென்று பாண்டிக் கொடுமுடியிலுள்ள. சிவன் கோயிலுக்குச் சென்று பரவிய திறம் கூறுமிடத்து, "பூவிரியும் பொழிற்சோலைக் காவிரியைக் கடந்திட்டு, அழகமைந்த வார்சிலையின் மழகொங்கம் அடிப்படுத்தும் ஈண்டொளிய மணியிமைக்கும் எழிலமைந்த நெடும்புரிசை பாண்டிக் கொடுமுடிசென்றெய்திப் பசுபதியது பதுமபாதம் பணிந்தேத்திக் கனகராசியும் கதிர்மணியும் மன மகிழக் கொடுத்திட்டும்" 2[2] என்பது இவர்க்குச் சிவன்பாலுள்ள அன்பைப் புலப் படுத்துகிறது.

இனி, இவரைப் பற்றிக் கூறவந்த திரு.மு.இராகவையங்காரவர்கள், "இவ்வேனாதியென்னும்அடை மொழி தந்தையும் மகனுமாகிய சாத்தர்இருவர்க்கும் சேரக்கூடியது ஆதலால்,அவருள் ஒருவர்பாண்டியன் சேனதிபதியா யிருந்தவர் என்றுகொள்ளப்படும்" என்றும்,"இத்தமிழ்ப் பாடலில் வட பதங்களையும் தொடர்களையும் மிகுதியாகவே இச்சாத்தஞ் சாத்தன் வழங்குகின்றார், இவரைப்

1. Ibid, çu jfi. 98-103. 2. Ep. Indi. Vol. XVII. No. 16. suf. 79:83.


  1. Ibid வரி98-103
  2. Ep.Indi.Vol.XVII.No.16 வரி 79-83