பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:288

 போலவே சின்னமனூர்ச் செப்பேடுகளிற் கண்ட தமிழ்ப் பகுதியைப் பாடிய புலவரும் வழங்குவர்; இதனால்அக் காலத்தே மணிப்பிரவாள நடை வழக்கு மிகுதிபெற்று அரசாங்கத்தும் பயின்று வரலாயிற்றென்பது பெறப்படு கிறது "1

[1]என்றும் கூறுகின்றார்.

இவ்வாறு கூறி வருபவர், இடையே, "ஏனாதி என்பது ஸேனாதி என்பதன் திரிபாய்ப் படைத்தலைவன் என்னும் பொருளது”2 [2]என்ற ஒரு கருத்தைப் பையநுழைக்கின்றார். ஏனாதியென்பது சேனாதி யென்பதன் திரிபாயின், ஏனாதி யினும் அச்சேனாதி என்ற சொல் வழக்கின்கண் தொன் மையுடையதாகல் வேண்டும் ; சேனாபதி என்ற வடசொல் தமிழ் நாட்டில் தோன்றுதற்குப் பல நூற்றாண்டுகட்கு முன்பே ஏனாதி என்ற சொல் தொன்று தொட்டு வந்த தொன்மையுடையது. அதனால், ஏனாதி யென்பது ஸேனாதி யென்பதன் திரிபெனக் கூறுவதை உண்மையறிவுடையார் ஒருகாலும் உரையார். மேலும், சேனதிபதி, சேனைத் தலைவர் என்ற சொல் வழக்கு உண்டேயன்றிச் சேனாதி என்றொரு சொல் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்கு முன் தோன்றி நிலவிய தமிழ் நூல்களில் தோன்றியதே கிடையாது ; என்றும் தோன்றியிராத சொல்லொன்றை நாட்டி அதன் திரிபு இத் தமிழ்ச் சொல்லெனச் சொல்லுவது: ஆராய்ச்சியாளர்பால் மறந்தும் தோன்றக்கூடாத குற்றமாகும். அன்றியும், சேனாபதியென்ற பொருளில் இச் சேனாதி யென்ற சொல் வேறு எந்த நாட்டிலேனும் வழங்கிற்றாயின், அது தானும் ஒருவரது பதவியைக் குறித்து நிற்குமேயன்றி நன்மதிப்புக் குறியாக விளங்கும் பட்டமாகாது ஏனாதி யென்பது காவிதி, எட்டி முதலியன போன்ற சிறப்புப் பெயராகும். வடமொழியின் வாடை நம் தமிழகத்துள் புகுதற்குப்பன்னூறாண்டுகட்குமுன்பிருந்தே இச்சொற்கள் தமிழரிடை நிலவி வருகின்றன. அன்றியும், சேனாதி யென்பது தொழில் பற்றி நிற்பது ஏனாதி யென்

1. சாசனத் தமிழ்க்கவி சரிதம். பக். 24. 2. 2ை பக். 23. -


  1. சாசனத்தமிழ்க்கவி சரிதம் பக்.24
  2. சாசனத்தமிழ்க்கவி சரிதம் ப.23