பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மாணிக்கவாசகர்

291


என்று விடையிறுத்தார். பின்னர், வாதவூரடிகள் அந்நூற் பொருளைக்கேட்டுணர்ந்து சிவபுரம்பொருளே இவ்வாறு ஞானகுருவாக எழுந்தருளியுள்ளார்" என்று கருதி, அவர் திருவடிகளில் வீழ்ந்து தம்மையும் ஆட்கொண்டருளுமாறு இறைஞ்சிகின்றார் ஞான குரவரும், அன்றே அவர் பால் அருணோக்கம் வைத்து, அவர்முடிமேல் தம் திருவடி சூட்டி, ஆட்கொண்டு உண்மை ஞானத்தை உரைத்தருளி ஞர். அது கேட்டுப் பெருமகிழ்ச்சிகொண்ட திருவாதவூரர், தாம் குதிரை வாங்குதற்குக் கொணர்ந்த பொன் அத்தனையும் ஞானசிரியர்க்குக் காணிக்கையாக வைத்தார். ஆசிரியரும், அதனே யேற்று, "இதனைச் சிவன் கோயில் திருப் பணியிற் செலவிடுக என ஆணையிட்டனர். வாதவூரரும் அவ்வண்ணமே அதனைத் திருப்பெருந்துறைத் திருக்கோயில் திருப்பணியிற் செலவிடலானர்; அக்காலை அவர் தம்மை மறந்தார்; தாம் குதிரை வாங்க வந்திருக்கும் கருத்தையும் கைவிட்டொழிந்தார்.

இச் செய்தி யறிந்த பாண்டிவேந்தன், திகைப்புற்று, ஒலையொன்றை எழுதித் திருவாதவூரர்க்கு விடுத்தான். அது. கண்டதும் திருவாதவூரர்க்குப் பண்டைய நினைவு தோன்றிற்று : இறைவன்பால் உண்மையைச் சொல்லி முறையிட்டு நின்றார். அப்போது, ஐந்தாறு நாட்களில் குதிரைவரும் எனப் பாண்டி வேந்தனுக்குத் தெரிவிக்குமாறு ஒரு வானெலி பிறந்தது. உடனே, பாண்டி மன்னர்க்குத் திருவாதவூரர் ஓர் ஒலையெழுதி முன்னர்ச் செல்ல விடுத்துத் தாம் பின்னர் மதுரை சென்று பாண்டியனைக் கண்டு குதிரை வரும் என்று அறிவித்தார். குறித்த நாள் வருமுன்னே சிலர் பாண்டிய&னக் கண்டு திருப்பெருந்துறையில் நிகழ்ந்தது முற்றும் நிரல் படக்கூறினர்; அதனே ஒற்றரால் உண்மையென உணர்ந்த வேந்தன், பெருஞ்சினம் கொண்டு திருவாதவூரரைச் சிறையிலிட்டு வருத்தினான்.

குதிரை வருமெனக் குறித்தநாளன்று குதிரைகள் தவறாமே வந்தன. சிவபெருமான் குதிரை வாணிகன் உருவில் வந்து வேந்தனுக்கு அக்குதிரைகளைக் கயிறு மாற்றித்