பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் நாட்டு வரலாறு

21

டுக்களால் தமிழகத்தில் அந்நாளில் நிலவிய கோயில்கள் 530-க்குக் குறையாமல் உள்ளமை தெரிகிறது. அரசியற் கல்வெட்டுத் துறையினரால் இதுவரைப் படியெடுத்துள்ள கல்வெட்டுக்களை நோக்கின், தமிழ்நாட்டிற் பேரூர்கள் எத் துணையுண்டோ அவற்றை விட அத்துணை இரட்டிப்பான கோயில்கள் உளவாதல் தெளிவாகிறது.

இவ்வண்ணம் சைவக் கோயில்கள் நாடுமுழுதும் பேரூர் தோறும் நின்று மக்கள் வாழ்வைத் தம்மோடு பிணித்து நின்ற காலம், பல்லவர்களும் பாண்டியர்களும் இடைக்காலச் சோழர்களும் தங்கள் ஆட்சியை நடத்திய காலமாகும். நாட்டினது ஆட்சிமுறையும் கோயில்களின் வாயிலாக நாட்டில் இனிது இயங்கியது அக்காலமே. சங்ககால வேந்தர்கள், புலவர்களைப் பேணுமாற்றால் இயற்றமிழையும், பாணர்களால் இசைத்தமிழையும், கூத்தர் களால் நாடகத்தமிழையும் வளர்த்தாராக, இடைக்காலத்துப் பல்லவரும் பாண்டியரும் சோழரும், இவர்களை அடி யொற்றிப் பிற்காலப் பாண்டியரும் விசயநகர வேந்தரும் இக்கோயில்களின் வாயிலாக இயலிசை நாடகங்களை இறவாது பாதுகாப்பாராயினர். சைவ இலக்கியங்களும் பேணற்பாடு பெற்றன.

இனி, இக்காலத்தே சைவ இலக்கியங்கள் வளர்ந்த வரலாற்றைக் காண்டற்கு முன், இவற்றுள் முன்னணியில் திகழும் திருஞானசம்பந்தர் முதலிய அருட் சான்றோர்கள் காலத்து வேந்தர்களான பல்லவர்கள் ஆட்சியில் கல்வி நிலை இருந்த திறத்தை முதற்கட் காண்பது இன்றியமையாததாகும். பல்லவர்கள் தமிழ் நாட்டவரல்லரென்பதும், காலஞ் செல்லச் செல்லப் படிப்படியாக வடநாட்டிலிருந்து தென்னாடு புகுந்து தொண்டைநாட்டிலும் சோழநாட்டிலும் பரவியவரென்பதும் அவர்கள் வரலாற்றால் அறியப்படுகின்றன. எனவே, அவர்கட்குத் தமிழ் வேற்றுமொழி யென்பதும் வடமொழி உரிமைமொழி யென்பதும் வெளிப் படை. ஆகவே அவர்கள் ஆட்சியில் வடமொழியே பெரிதும் பேணி வளர்க்கப்படும் என்பது சொல்லாமலே விளங்கும். பல்லவர்கள் காலத்தில், பாரவி, தண்டி