பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300|சைவ இலக்கியவரலாறு

வார்ப்புரு:300 சைவ இலக்கிய வரலாறு

ஆராய்ச்சிகளால் நன்கு வலியுறுகின்றது. அதனை ஈண்டு ஆராய்ந்து காண்பது சிறப்பாதலின் அதுபற்றிக் காட்டப் படும் கருத்துக்களை முறையே ஆராய்வாம். அடிகள் காலம் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டென்போர் நெல்சன், இன்னஸ் என்போரும், M. சீனிவாசய்யங்கார், S. அனவரதவிநாயகம் பிள்ளை, K. S. சீனிவாசப் பிள்ளை, T.P. பழனியப்ப பிள்ளை முதலியோருமாவர்.

இவருள், இன்னஸ் (Innes) மணிவாசகர், சங்கரரை ஒட்டி அவரையடுத்துத் தோன்றியவர்: சங்கரர் காலம் .கி. பி. 788-முதல் 820 வரையில் என்பர் ; ஆகவே மணிவாசகர் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் இருந்தவராதல் வேண்டும் என்று கூறுகின்றார். K. S. இராம சாஸ்திரி முதலியோர் சங்கரர் கி. பி. முதல் நூற்றாண்டில் இருந்தவரென வற்புறுத்துகின்றனர். அவர்களது கூற்று உண்மையென வலியுறுமாயின், இன்னஸ் என் பார் முடிபு வேறு சான்று வேண்டி நிற்கும் குறையினை எய்தி வன்மை இழந்து விடுகிறது.

கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அதாவது கி. பி. 819-ல் ஈழநாட்டுக்குச் சென்று சிவநெறியை மக்களிடையே பரப்பிப் பலரைச் சைவராக்கிப் சைவமுனிவர் மாணிக்கவாசக அடிகள் என்பது நெல்சன் என். பார் கூற்று. அக்கூற்றுக்கு ஆதரவாக மணிவாசகப் பெரு மான். ஈழநாட்டு வேந்தன் மகள் ஊமையாயிருந்தாளாக, அவளைப் பேசச் செய்தார் என்று கூறப்படும் வரலாற்றுக் குறிப்பை அறிஞர் நினைக்கின்றனர். மணிவாசகர், கடல் கடந்து ஈழநாட்டுக்குச் சென்றார் என்பதை அவர்வரலாறு எவ்விடத்தும் கூறவேயில்லை. அதனால்அவர் கூற்றும் செவ்விய சான்றுகளை அடிப்படையாகக் கொள்ளாத குறையுடையதாகின்றது.

இனி, அடிகள் ஒன்பதாம் நூற்றாண்டினர் என்ற கருத்தை வலியுறுத்தப் போந்த சான்ரறோர்களுள் தஞ்சை K. S. சீனிவாசப் பிள்ளையவர்கள் பல ஏதுக்களைக் கூறுகின்றார்கள் :-

திருவாதவூரர் அருளிய நூல்கள் திருஞான சம்பந்தர்