பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:304

 மலங்கள் மூன்றெனத் தேவார ஆசிரியர்கள் குறியாதிருப்ப மாணிக்கவாசகர் குறித்தருளுவதை எடுத்துக் காட்டி இவ்வாற்றால் அடிகள் தேவார ஆசிரியர்கட்குக் காலத்தாற் பிற்பட்டவரெனத் திரு.பிள்ளையவர்கள் கூறுகின்றார்கள். இது பொருத்தமாகவும் உண்மையாகவும் உளது. - இனித் தமிழ் வரலாறுடையார், "தாழிசை, துறை, விருத்தம் என்னும் இன இலக்கியங்களைச் சங்கச்சான்றோர்கொள்ளவில்லை.தேவாரங்களில்விருத்தங்கள் காணப்படுகின்றன ; திருவாசகம் திருக்கோவையார் இவற்றில் விருத்தம் துறை இரண்டும் காணப்படுகின்றன" என்று கூறுகின்றார். திருவாதவூரடிகள் பாடும் பாவினங்களுள் பெரும்பாலன தேவாரங்களிலும் உள்ளனவாதலால் இவ்வேது வலியுடையதாக இல்லை, -. அடிகள் பாண்டியன் வரகுணனைப் பாடியுள்ளார் என்றும், அவன் கி. பி. 862-8-ல் பட்டம் பெற்றானெனச் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கண்டிருக்கிறார்கள் என்றும் அவ் வரகுணனைப் பட்டினத்தடிகளும் பாடியுள்ளார். என்றும், அப்பட்டினத்தடிகளே அடிகளையும் பாடியிருக்கின்றார் என்றும் அவர் கி. பி. பத்தாம் நூற்றாண்டில் இருந்தவர் என்றும், எனவே, திருவாதவூரடிகள் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் இருந்தவர் எனக் கொள்ளலாம் என்றும் கூறுகின்றார். இங்கே சிலர் வாத வூரடிகள் சொல்லிய வரகுணன், வம்சாவளியிற் கண்ட இரண்டு வரகுணனுக்கும் முந்திய காலத்தவனாயிருக்கக் கூடாதா என்கின்றனர்' என்று தடையொன்று நிகழ்த்தும், திரு. பிள்ளையவர்கள் தக்க சான்று கொண்டு மறுத்து மேற்கண்ட வரகுணன் இன்னான் என்பதை வற்புறுத்தாதொழிகின்றார்.

இனி, M. சீனிவாச அய்யங்கார் அவர்கள் மாணிக்க வாசகரது காலம் பற்றித் திரு. K. S. சீனிவாசப் பிள்ளையவர்கள் கூறிய காரணங்களுட் பலவற்றைக் காட்டி வேறு ஏதுக்களையும் தொடுத்துரைக்கின்றார்,1தமிழ் வரலாறு.பிற்பாகம் பக்.103 (முதற்பதிப்பு)

1. தமிழ் வரலாறு. பிற்பாகம் பக், 103. (முதற் பதிப்பு)