பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

{{|Rh|மாணிக்கவாசகர்|305|}}

 மாணிக்கவாசகரது திருக்கோவையார் இறையனார் அகப்பொருளைப் பின்பற்றி நிற்பது, அந்த அகப் பொருளின் காலம் கி.பி. 650-க்கு முன் இருக்க முடியாது. அதற்குள்ள நக்கீரனரதுஉரையின் காலம்கி.பி 740 ஆகலாம் ; ஆகவே மாணிக்கவாசகர் காலம் கி. பி. 740-க்குப் பின்பேயாகிறது. மதுரைத் தலபுராணப்படியே நோக்கினும் மாணிக்கவாசகர் கி. பி. 770-க்குப் பின்பு தான் நிலவியிருக்க வேண்டும். என்பர்.1[1]இக்கருத்துக்கள் வலியுடைய ஏதுக்களைக் கொண்டு சாதிக்கப்படாமையே குறை இவற்றை அய்யங்காரவர்கள் தாமே நாட்டிக்கொண்டு செல்வது உண்மையாராய்ச்சிக்குத் துணையாகாதொழிகிறது. வாதவூரடிகள் ஈழநாட்டிற்குச் சென்று சிவநெறியை யுணர்த்தி அங்கிருந்த புத்தருட் பலரைச் சைவராக்கினர் என வாதவூர்த் தலபுராணம் கூறுகிறது என்றும், அச் செய்தி. ஈழநாட்டிலுள்ள இராஜ ரத்நாகரி என்னும் நூலால் வலியுறுகிறதென்றும், அது கி. பி. 869 அளவில் நிகழ்ந்தது என்றும் அறிஞர் கூறுகின்றனர். இத்தலபுராணச் செய்தியை அடிப்படையாகக் கொண்டே திரு. நெல்சன் (Nelson) என்பார் எழுதியுள்ளார். இதுவும் உண்மையை அடிப்படையாகக் கொண்டதன்று என்பது முன்பே கூறப்பட்டது.

மாணிக்கவாசகர் கையாண்டுள்ள செய்யுள் நடையும் சொல்வழக்குகளும், வைணவ ஆழ்வார்களாகிய பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார் முதலியோர் நடையும் வழக்கமும் முறையுமாகிய கூறுகளில் ஒத்திருத்தலால் அவர்களது காலமே இவர் காலமுமாகலாம். அவர்கள் கி. பி. 850 - 925-ல் இருந்தவர்கள் என்பர். இவ்வேதுவும் அத்துணைவலியுடையதன்று என்பதை உயர்திரு மறை மலையடிகள், விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளார்கள்.2[2]ஆழ்வார்களின் கால நிலையை வரையறுத்துரைப்பதையும் திரு. அய்யங்காரவர்கள் மேற்கொள்ளவில்லை.

1. Tamil Studies. p. 405.

2. மாணிக்கவாசகர் வரலாறும் காலமும், பக். 245-300.

SIV-20


  1. Tamil Studies p.405
  2. மாணிக்கவாசகர்வரலாறும் காலமும் பக்245-300