பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாணிக்கவாசகர்

311


கும் வேந்தன் இரண்டாம் 'வரகுணனேயாவன் என்றும் கூறுகின்றார். ஆனால், முதல்வரகுணவேந்தனது வரலாற்றை ஆராய்ந்த திரு. T. V. சதாசிவப் பண்டாரத்தாரவர்கள், "வரகுண மகாராசனது ஆட்சியின் நான்காம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் சோழநாட்டிலுள்ள திருவியலூர் திரு நெய்த்தானம் என்னும் ஊர்களிலும், எட்டு பத்தாம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் திருச்சிராப்பள்ளி திருக்கோடிகா என்ற ஊர்களிலும், ஆண்டு அழிந்துபோன கல்வெட்டொன்று திருச்சோற்றுத்துறையிலும் இருத்தலால் சோழமண்டலம் முழுவதும் இவனது ஆட்சிக்குட்பட்டிருந்தமை நன்கு புலனாகின்றது. அன்றியும், கி. பி. 775 முதல் 826 வரையில் அரசாண்ட பல்லவ வேந்தனாகிய தங்திவர்மன் கல்வெட்டுக்கள் சோழ மண்டலத்தில் காணப்படவில்லை; எனவே, அப்பல்லவனது ஆட்சியில்தான் வரகுண மகாராசன் சோழ நாட்டின்மேல் படையெடுத்து அதனைத் தன் ஆளுகைக்கு உள்ளாக்கியிருத்தல் வேண்டுமென்பது தெள்ளிது ' என்று கூறுகின்றார். இரண்டாம் வரகுணன் சோழநாட்டுக்குப் படை கொடுவந்ததற்குக் காரணம், ஆவன் தந்தையான சீவல்லபன் காலத்தில் முதல் வரகுணன் வென்ற சோழநாட்டுப்பகுதி கையிழக்கப்பெற்றது என்றும் இடவைநகர்க்கண் முதல் வரகுணன் அமைத்திருந்த அரண்மனையும்பிறவும் மீளவென்று கொள்வதற்கு ஏற்ற வாய்ப்பு உண்டாகியிருந்தது என்றும் திரு. பண்டாரத்தவர்கள் கூறுகின்றார்கள். இடவை, வேம்பில் என்ற இடங்களில் வெற்றி பெற்றும் திருப்புறம்பயப் போரில் இரண்டாம் வரகுணன் பெருந் தோல்வி எய்தித் தன் பாண்டி நாட்டிற்குத் திரும்பியோடிய செய்தியை வரலாறு கூறுகிறது.

திருவாதவூரடிகள் அருளிய திருவாசகம் திருக்கோவை என்ற நூல்களும் பட்டினத்தடிகள் வழங்கும் பொருளுரைகளும் திருவிடைமருதூர்த் தலபுராணமும் பிறவும் கூறுவனவற்றைக் காண்போர், திருவிடைமருதுரர் தில்லை ஆகிய இடங்களில் வரகுணவேந்தன் நெடிது தங்கிச் சிவப் பணி புரிந்து சிறந்தான் என்பதை நன்கறிவர்; திருப்புறம்