பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

320

சைவ இலக்கிய வரலாறு

ஞானகுரவனை அடிகள் சிவனெனவே தேறி வணங்கின திறத்தை, "பத்தர்சூழப் பராபரன் பாரில் வந்து பார்ப்பானெனச், சித்தர் சூழச் சிவபிரான் தில்லை மூதூர் நடம் செய்வான், எத்தனாகி வந்து இல்புகுந்து எமை ஆளுங் கொண்டு எம் பணி கொள்வான், வைத்த மாமலர்ச் சேவடிக் கணம் சென்னி மன்னி மலருமே" என்றும், திருப் பெருந்துறையில்ஆட்கொள்ளப்பட்ட திறத்தைத் "திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந்துறையிற் செழுமலர்க் குருந்த மேவிய சீர், இருந்தவாறெண்ணி ஏசறா நினைந்திட்டு என்னுடைய எம்பிரான் என்றென்று அருந்தவா கினேந்தே ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றருளாயே"[1] என்றும் வரும் திருவாசகங்கள் வற்புறுத்துகின்றன.

ஞானகுரவனது அருளுரை பெற்றபின், அடிகள் அவனால் ஆங்கு மறையோதிக் கொண்டிருந்த அடியவர் கூட்டம் காட்டப்பெற்றது என்றும், அடிகள் அவ்வடியர் கூட்டத்துட் சேர்க்கப்பெற்றார் என்றும் வரலாறு கூறுகிறது. இதனை, "அத்தன் ஆண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயம் கண்டாமே[2]" என்று திருவாசகம் உணர்த்துகிறது

ஞானகுரவன் மணிவாசகரை, "நம்மைத் தில்லேயம் பலத்தே வந்து காண்க எனப் பணித்து கிறுத்தி விட்டு மறைந்தான் என்பது வரலாறு. இதனை மணிவாசகப் பெருமானே,

  "நாயி னேனை நலமலி தில்லையுள்
கோல மார்தரு பொதுவினில் வருக என
ஏல என்னை ஈங்கொழித் தருளி அன்றுடன் சென்ற அருள்பெறும் அடியவர்
ஒன்ற ஒன்ற உடன்கலங் தருளியும்"[3]

என்று குறித்தருளுகின்றார்


  1. 1. திருவா. அருட். 1.
  2. அதிசயப். 4,
  3. கீர்த்தி. 127-181.