பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாணிக்கவாசகர்

323


என்றும் திரு. T. P. பழனியப்ப பிள்ளை கூறுகின்றார்.1 இதற்கு உரைகண்ட திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளை முதலியோர்2 இடவையைத் திருவிடை மருதூர் என்றே 'கொண்டனர். இடவை யென்பது காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் இடையில் உள்ள நாட்டில் இருந்து மறைந்து போயிற்று. கல்வெட்டுக்கள் அதனை “இராசேந்திர சிம்ம வளநாட்டு மண்ணி நாட்டு இடவை”3 என்று கூறுகின்றன. இரண்டாம் வரகுணன் இந்த இடவை நகரைக் கைப்பற்றற்கு என்றே பாண்டி நாட்டினின்று படைதிரட்டி வந்தான் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன; இதனை நோக்கும்போது இடைக்காலப் பாண்டியர் காலத்தே இடவை ஒரு பெருநகரமாய் விளங்கினமை5 தெரிகிறது. முதல் வரகுணன், சோழநாட்டின் மீது படைகொண்டு வந்து வென்று மேம்பட்ட காலத்தில், மண்ணிகாட்டு இடவையில் வாழ்ந்த சோழ வேந்தன் ஒருவனுடைய மகளே மணந்து கொண்டு தன் இறுதிக் காலத்தே இடை மருதூர் இறைவன்பால் பேரன்பு பூண்டு தொண்டு செய் தானகல் வேண்டும். குறுகில மன்னனப் ஒளிமழுங்கி யிருந்த சோழர் குடித்தோன்றல் ஒருவன் மகளே இட்வை நல்லாளாவள் அவளேயே வரகுணன் மணந்திருக்க வேண்டும். அங்கே வரகுணனுக்குச் சீர்த்த அரண்மனையும் இருந்திருக்கும். பிற்காலத்தே பல்லவரும் கங்கரும் கூடிச் செய்த போரில் மண்ணி நாட்டுப்பகுதியிலிருந்த சோழன், முதலாதித்த சோழனுக்குத் துணைவனுனது பற்றியே இரண்டாம் வரகுணன் பாண்டிப் படை கொண்டு இடவை நகர் நோக்கி வந்தானகல்வேண்டும். இவ்வாற்ருல், இடவை


I. J. S. V. O. I. Tirupati. Vol. IV.
2. திருவா. 43-2. உரை.
3. S. I. I. Vol. II. p. 53.
4. A. R. No. 690 of 1905. Ep. Indi. Vol. IX. p. 87.
5. இடவையான பாண்டியன வெங்கண்ட சோழச் சதுர் வேதி மங்கலம் என்று இதற்கு ஒரு பெயருண்டெனத் திருப் பனந்தாளிலுள்ள கல்வெட்டொன்று (A. R.No. 42 of 1914) கூறுவது நோக்கத்தக்கது.