பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 சைவ இலக்கிய வரலாறு

குரவய்ைவங்து ஞானமருளியதும், இறைவன்பால் அயரா அன்புகொண்டு அவனேயன்றி வேறுகளே கண் இல்லாமை தேர்ந்து அவனேயே நினைந்து வழிபட்டு நின்றதுமாகிய இவை குறிக்கப்படுகின்றன.

தெய்வம் ஒன்று உண்டெனத் தேர்ந்து அத்தெய்வமும் சிவபரம்பொருளே எனக் கொண்ட திறத்தைத் தென் டுைடைய சிவனே போற்றி, எங்காட்டவர்க்கும் இறைவா போற்றி ' என்பதலுைம், வேறு தெய்வங்களேப் பொரு ளாகக் கருதாத திறத்தை 'உள்ளேன் பிறதெய்வம் உன்னே யல்லாது எங்கள் உத்தமனே,'2 நின்னலால், தேசனே ஒர் தேவருண்மை சிந்தியாது சிந்தையே ' என்று கூறு வதலுைம் அறியலாம்.

இனி, காளேப்பருவத்தே, கல்வி, செல்வம் முதலிய நலம் சிறந்து விளங்குகையில் மகளிர்கூட்டத்தில் அடிகள் பேரீடு பாடு கொண்டிருந்ததாக நீத்தல் விண்ணப்பம், அட்ைக் கலப்பத்து முதலிய பகுதிகளில் குறிக்கின்ருர். "முழுதயில் வேல் கண்ணியர் என்னும் மூரித்தழல் முழுகும், விழுதனே யேனை விடுதி கண்டாய்" உழை தருநோக்கியர் கொங் கைப்பலாப்பழத்து ஈயின் ஒப்பாய்,விழைதஞ்வேனேவிடுதி. கண்டாய்" மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத் திட உடைந்து, தாழியைப் பாவுதயிர்போல் தளர்ந்தேன்' 'மின்கணினர் நுடங்கும் இடையார் வெகுளி வலையில் அகப்பட்டுப் புன்கணய்ைப் புரள்வேன் ' என்றுவருவன போலும் பல குறிப்புக்கள் இதனே வற்புறுத்துகின்றன.

இவ்வாறே, உலகியலில் உயிரையோம்பி உண்டு உடுத்துே இனிது வாழும் இன்ப வாழ்வில் செய்வது அறியாது." இரு ளிற் கிடந்து,19 கல்வியும் ஞானமும் இன்றி மனம் அழுக் குற்று, உயர்ந்தோர் வெறுப்பனவே செய்து' சிறுமை

1. போற்றித் திரு. 164 : 5. 2. திருச் சதக. 2. 3. திருச் சதக. 78. 4. நீத்த வண்ணப். 44. 5. நீத்த வண்ணப். 46, 6. அடைக். 6. 7. அடைக். 7. 8. திருச் சத. 40. 9. திருச் சத. 52. 10. அடைக். 5. 11. அடைக். t 1. - 12. 62 2.