பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

சைவ இலக்கிய வரலாறு

வேளுர்ப்பாளையம் செப்பேடுகளும் இக்கடிகையைக்[1] குறிக்கின்றன.

இக்கடிகையில் பெரும்பாலும் வேதியர்களே கல்வி பயின்றனர். அவர்கட்கு வேண்டும் வேதங்களும் இங்கே கற்பிக்கப்[2] பெற்றன. கற்பித்தோரும் கற்றோருமாகிய இரு திறத்தாரும் வேதியர்களேயாவர். கடம்ப வேந்தனை மயூரசன்மனும் அவனுடைய ஆசிரியரான வீரசன்மரும் வேதவேதாங்கங்களைக் கற்று ஓரள்வு வல்லமை பெற்ற பின்னரே காஞ்சிக் கடிகைக்கு வந்து கல்வி பயின்ற்னரென்பர். இதனால் இக்கடிகையில் கற்பிக்கப்பட்ட வடகலையின் பொதுநிலை, மிகவுயர்ந்த நிலையினையுடையதென்பது நன்கு விளங்கும்.

பல்லவ வேந்தர்கள் இக்கடிகையைச் சிறப்பாகப் பேணி வந்தனர். ஒருகால் சத்தியசேனன் என்பவன் இக்கடிகையைக் கைப்பற்றிக் கொண்டானாக, கந்த சிஷ்யன் என்ற பல்லவ வேந்தன் அவனப்பொருது வென்று கடிகையைப் பண்டுபோற் சீர்பெறச் செய்தான். முதன் மகேந்திரவன்மனும்[3] இதனைப் பெரிதும் விரும்பி வேண்டுவன செய்து உதவினன். இராசசிம்ம பல்லவன், “நான்கு வேதங்களை யும் கற்பிக்கும் இக்கடிகையை நன்கு பரிபாலித்தான்” என்று காசாக்குடிச் செப்பேடு கூறுகிறது.

இவ்வகையில் இக்கடிகையாருக்கும் பல்லவ வேந்தருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டாகியிருந்தது. அதனால், வேதம் கற்பான் வந்த மயூரசன்மனுக்கும் பல்லவருக்கும் பகைமையுண்டாயிற்று. ஒருகால் பகைவர் பொருது பல்லவவரசைக் கவிழ்க்க முயன்றபோது இக்கடிகையும் பகைவரால் சீரழிவதாயிற்று. அக்காலத்தில் வேந்தரிடையே நிகழ்ந்த போர்கள் கோயில்கட்குக் கேடு செய்ததில்லை. பிற்காலத்தே கோயில்கள் பெருஞ்செல்வ நிலையங்-


  1. 1. S. I. Ins. Vol. II P. iii. p. 349; Ibid. P. V. p. 508.
  2. 2. Ep. Car. Vol. V. No. 178 p. 462. S. I. I. Vol. II. P. iii
  3. 3. S. I. I. Vol. II. P. iii. 349 & 356.