பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 சைவ இலக்கிய வரலாறு

ஊசலாட்டும் இவ்வுடலுயிராயின,

இருவினை யறுத்து என்னே

ஒசையால் உணர்வார்க்கு உணர்வரியவன்

உணர்வு தந்து ஒளியாக்கிப்

பாசமானவைபற்றறுத்து உயர்ந்த தன்

பரம்பெருங்கருனேயால் ... "

ஆசை தீர்த்து அடியார் அடிக்கூட்டிய

அற்புதம் அறியேனே '1

என்று பாடிப் பரவுகின்ருர்.

இறுதியாக, திருவாதவூரடிகள் உலகவராகிய நமக்குச் சில அறிவுரை பகர்கின்ருர், "மக்களாகிய பத்தர்களே, நீங்கள் இறைவன் திருநாமத்தைப் பாடித் திரிகின்றீர்கள் : இங்கே வாருங்கள் ; நம் இறைவனே உங்கள் பாசம் திரப் பணிமின் ; பணிந்தால் அவன் சேவடிகள் நம் சென்னிக் கண் மன்னித்திகழும்.” மக்களே, விேர் ஐம்புலன்களில் புகவேண்டா; இறைவன்பூங்கழல்களேயே நினைமின் பிற வெல்லாம் வேண்டா; இதல்ை தளர்ச்சியின்றி யிருக்க லாம். இனி, விேர் வெகுளியைவிடுமின்: இறைவினைப்புகழ் மின், தொழுமின்: பூப்புனேமின் அவன் திருவடிகளே மனத்துட்கொண்டு எல்லா அல்லல்களேயும் இகழ்மின்ே இன்றே வந்து ஈசனுக்கு ஆளாகுமின், ஆளாகாது ஒழியின், பின்னர் மருள்வீர்; உம்மை ஒருவரும் மீதியார் ; அதனுல் மயங்குவீர்கள். இவற்றைத் தெளிய எண்ணித் தெருளு விராயின், இது செய்ம்மின்' என்பது.

திருக்கோவையார்

திருவாதவூரடிகள் பாடியருளிய திருக்கோவையாரே, தமிழிற் காணப்படும் கோவைநூல்களுள் தலைசிறந்ததாக அறிஞர்களாற் பாராட்டப்பெறுவது. இ.து ஆர் என் னும் சிறப்புணர்த்தும் இடைச்சொல் புணர்ந்து திருக் கோவையார் என்று பெயர் கூறப்படுவதே போதிய

1. அற்புதப்பத்து. 8 2. சென்னிப்பத்து. 10. 3. யாத்திரைப்பத்து. 2. 4. யாத்திரைப்பத்து. 5.

- 6

5. 62 6. .ை 10.