பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 சைவ இலக்கிய வரலாறு

ஒண்தளேயாயின' என்பர் : திருவாதவூரடிகளும் அவ் வாறே பல்லோரும் காண என்றன் பசுபாசம் அறுத் தானே” என்றும், மல மூன்றையும் மும்மலமெனவழங்கும் திறத்தை உள்ள மலம் மூன்றும் மாய' எனவும், 'மும்மை மலம் அறுவித்து முதலாய முதல்வன்' எனவும் கூறுவர்.

மாயையின் காரியமாக ஆகமங்களிற் கூறப்படும் கருவி கள் முப்பத்தாறனுள் அந்தக் கரணம் நான்காகும். அவற்றை நெறிப்படுத்திச் சிவத்தின்கண் ஒன்று வித்து ஒழுகும் சிவஞானிகளின் மலமறுத்து அவர் கரணங்களேச் சிவகரணங்களாக்கி இறைவன் ஆட்கொள்வன் என்பது சித்தாந்தம்; இதனைத் திருஞான சம்பந்தர், 'நாலந்தக் கரணமும் ஒரு நெறியாய்ச் சித்திக்கே உய்த்திட்டுத் திகழ்ந்த மெப்ப் பரம்பொருள் சேர்வார் தாமே தானுகச் செயும் அவன் ' என்று குறித்தாராக, அடிகள், 'கூறு காவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ' என்றும், 'சித்த மலமறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன்" என்றும் எடுத்தோதி விளக்குகின்ருர். . . . . . * .

இனி, ஆன்மாக்களுக்கு இருவினை யொப்பும் மல. பாகமும் உண்டாகுங்கால் சத்திநிபாதமும் ஞானப்பேறும் நிகழும் என்பது சிவாகமம். இக்கருத்தையே, திருவாத வூரடிகள், " என் வினே யொத்த பின் கணக்கிலாத் திருக் கோலம் நீ வந்து காட்டிய்ை கழுக்குன்றிலே’ என்று கூறுகின்ருர். இங்ங்னமே, யான் எனது என்னும் இரு வகைப் பற்றுக்களேயும் இரண்டு என்றும் துவங் துவம் என்றும் இச்சமய நூல்கள் வழங்கும்; இவ் வழக்கினே, அடிகளும் மேற்கொண்டு, ' இரண்டுமில் இத் தனியனேற்கே ' என்றும், "துவங்துவங்கள் தூய்மை செய்து' என்றும் உரைத்தருளுகின்ருர்.

i. ஞானசம். 12 : 3. 2. கண்ட. 4. 3. பண்டாய. 2. 4. அச்சோப், 9. 5. திருஞான. 126: 7. 6. குழைத்த. 5. 7. அக்சோ. 1.