பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344. சைவ இலக்கிய வரலாறு

தொடங்கும் பாட்டில், கொடுங்குன்றின் நீள்குடுமி மேல் தேன் விரும்பும் முடவனைப் போல' என வருவது, 'நெடு வரைப் பெருங்தேன் கண்ட இருக்கை முடவன். உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து, சுட்டுபு நக்கியாங்கு ' என் ப்தையும், குன்முதிர்துள்ளு நடைப்பேடைக்கு இல்துணேச் சேவல் செய்வான், தேன்முதிர் வேழத்தின் மென்பூக் குதர் செம்மலுாரன்" என்று வாதவூர் அடிகள் கூறுவது, ' கரும் பின் வேல் போல் வெண்முகை பிரியத்திண்டி, முதுக்குறை குரீஇ முயன்றுசெய் குடம்பை, மூங்கிலங்கழை துரங்க ஒற்றும் ' என்பதையும் ஒத்து நின்று திருவாதவூரடி களின் சங்கத் தமிழ் நூற் புலமையை விரித்துரைத் கின்றன. -

இனி, பேயோடானும் பிரிவு இன்னது ' என்பது பழ மொழி ; இதனைப் பிரிவு செய்தால் அரிதே கொள்க பேயொடும் என்னும் பெற்றி, இருவி செய்தாளின் இருந் தின்று காட்டும் இளங்கிளியே' என்றும், இவ்வாறே, "கொற்சேரித் துன்னுரிசி விற்பவர் இல்" என்னும் பழ மொழியைத் திருக்கேர்வையாரில்"வைகொண்டவூசிகொற் சேரியின் விற்று எம்மில் வண்ண வண்ணப் பொய் கொண்டு நிற்கலுற்ருே புலே ஆத்தின்னி போந்ததுவே!" என்றும் அடிகள் கூறுகின்ருர்.

இனி, தான் கூறக் கருதும் கருத்துக்கள் பலவற்றையும் மக்கள் நாடோறும் தம் வாழ்க்கையிற் பயிலும் சொல் வழக்குகள் கருத்துக்களோடு இடையிடையே பெப் துரைக்கு மாற்ருல் 5ம் உள்ளத்திற் பதிவிக்கும் பொற்பு அடிகளது திருவருட் புலமையின் பெருகலகைத் திகழ் கிறது. இதனை விளக்கும் எடுத்துக் காட்டாக ஒன்றிரண்டு கூறுதும்.

ஒருவர் தாம் பெறுதற் குரியவற்றைக் குறைவறப்

1. குறுங். 60. 2. இருக்கோவை,369. 3. கற்றினே. 366. 4. பழ்மொழி. 126, 5. திருக்கோவை. 144. 6. శ 73.

7. 2 - 386.