பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் 345

பெற்று இறும்பூது எய்துங்கால், 'இனி ஒரு குறையில்லே: எங்கு எழிலென் ஞாயிறு எமக்கு' எனப் பேசிப் பெருமித முறுவது இயல்பு. இக்கருத்தைத் திருநாவுக்கரசர், 'வெம்ப வருகிற்பதன்று கூற்றம் நம்மேல் வெய்ய வினைப்பகை யும் பையநையும், எம்பிரிவு தீர்ந்தோம், இடுக்கணில் லோம், எங்கெழில் என் ஞாயிறு எளியோமல்லோம் : என்பதல்ை அறிகின்ருேம். இதன் நயம் கண்டு மகிழ்ந்த நம் அடிகள், இங்கு இப்பரிசே எமக்கு எங்கோன் நல்குதி யேல் எங்கெழில் என் ஞாயிறு எமக்கேலோ ரெம்பா வாய் 1:2 என்றுரைத்து இன்புறுகின்ருர் அடிகட்குப் பின் வந்த திருத்தக்க தேவர் முதலியோர், "எங்கெழில் என் ஞாயிறு என இன்னணம் வளர்ந்தேம்' என்று மேற் கொள்வாராயினர்.

பாணன் என்பான் செல்வத் தலைவர்கள் உவக்குமாறு தன்னை மிகத் தாழ்த்திப் பேசி அவர்கள் உள்ளத்தைத் தன் பால் வளைத்துக் கொள்ளும் விரகினன் என்பது சங்கத் தொகை நூல்களால் நன்கு அறியப்படுவதொன்று : அதல்ை தாழ்ச்சி புலப்படுக்கும் உரை பாண்மொழி யென் றும் பாண் ள்ன்றும் வழங்குவதாயிற்று. அதனே நம்பி யாரூரர், "எல்லோருங் காணப் பாண்பேசிப் படுதலேயில் பலி கொள்கை தவிரீர்" என்று வழங்கினர்; அதுகண்ட திருவாதவூரடிகள், ' காணுமாறு காணேன் உன்னே அங் நாள் கண்டேனும், பாணேபேசி என்றன்னைப் படுத்தது என்ன பரஞ்சோதி' என்று தாமும் எடுத்தாண்டு இன் புற்ருராக, பின்வந்த திருத்தக்க தேவர், 'பாண் குலாய்ப் படுக்கல் வேண்டா பைங்கிளி பூவை யென்னும் மாண் பிலாதாரை வைத்தார் என்னுருர் ' என்று தாம் பாடிய நூலிடைப் பெய்து பாடினர். படுத்தல் என்றதற்கு நச்சி ஞர்க்கினியர் அகப்படுத்தல் என்று பொருள் கூறுவர்.

இருமருங்கும் நின்று துன்பஞ்சுட இடை நின்று வருந்தித்

1. திருநாவுக். 309 : 2. 2. திருவெம்பா. 19. 3. சீவக. 1793. 4. சுந் 46 : 3, 5. திருச்சத. 84. 6. சீவக. 2515.