பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 சைவ இலக்கிய வரலாறு

திகைப்பவர் தம் துயர் நிலையை இருதலைக் கொள்ளி o கிலேயென்பது வழக்கம். இதனைத் திருநாவுக்கரசர், "எங்தை பெம்மான் இருதலே மின்னுகின்ற கொள்ளி மேல் எறும்பு என்னுள்ளம் எங்ங்னம் கூடுமாறே என்ருராக, திருவாதவூரடிகள், இக்கருத்தையே சிறிது விளக்கி, "இரு தலேக் கொள்ளியின் உள்ளெறும்பு ஒத்து நினைப்பிரிந்த விரிதலேயேனே விடுதி கண்டாய் ' என்று உரைக்கின்ஞர். 'இருதலைக் கொள்ளி மேல் ' என்னுமல், "உள்ளெறும்பு ' என்றது, முத்தொள்ளாயிர முடையார், "இருதலேக் கொள்ளியின் உள்ளெறும்பு போலத், திரிதரும்பேரும் என் நெஞ்சு' என்று கூறியது கொண்டு என அறிக.

மூத்துவிளியும் இயல்புடையது நம் யாக்கை ; அதனல் அதற்குக் கிளர்ச்சியும் தளர்ச்சியும் மாறி மாறி உண் டாதல் இயல்பு. கிளர்ச்சிக் காலத்தில் செய்வன செய்து வைப்பது தளர்ச்சிக் காலத்தில் பயன்படும். அதனால் அவ் வைப்பு எய்ப்பில் வைப்பெனப்பட்டுப் பண்டு தொட்டே வழங்கி வருகிறது. இதனைக்கண்ட வாதவூரடிகள், இறை வனே, "தொழும்பாளர் எப்ப்பினில் வைப்பனே என் றும், " எனக்கு எய்ப்பினில் வைப்பே" என்றும் கூறு கின்ருர். இவ்வாறே நம்பியாரூரரும், இறைவனே நல்லடி யார் மனத்து எய்ப்பினில் வைப்பை' என்றும், திரு. மங்கை மன்னன், ' எங்தையை எனக்கு எய்ப்பினில் வைப் பினே' என்றும் கூறுவது ஈண்டுக் குறிக்கத் தக்கது.

இனி, மிக்க நீரிடை கின்ருர்க்கு நீர் வேட்கை புண்டா காது. அது போலவே, நுகரத்தக்க நுகர் பொருள்களின் கடுவிருக்கும் ஒருவனுக்கு நுகர்ச்சி வேட்கை யுண்டாயின், அவனது நிலையை விளக்கற்கு 'வெள்ளத்துள் நாவற்றி யது போல” எனக் கூறுவது உலகியல். தலைமகளோடு

1. பழமொழி. 141. 2. திருநாவுக். 75:6. 3. நீத்தல், 9. 4. முத்தொள். 100. 5. பழமொழி. 358. 6. சதக. 98. 7. நீத்தல். 39. 8. சுந். 67:2.

பெரிய திரு. 7:10:4.