பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாணிக்கவாசகர்

351


பள்ளம் நோக்கி ஒடுவது நீர்க்கியல்பு ; பள்ளத்தில் விழுங்கால் கீழுள்ள பொருள்களே மேலேகிளப்பிக் கலக்கி அகழ்வதும் அதன்செயல்: இதனைப் 'பள்ளந்தாழ் உறு புனலின் கீழ்மேலாகப் பதைத்துருகும் அவர் " [1] என்பர். உணர்வாகிய உள்ளிடில்லாத ஒருவனைப் பெரியோர் பிணமேயென இழித்து உரைப்பது இன்றும் உலகியல்பு. உணர்வுடையார் தமக்குப் பிறர்செய்த நன்றி சிறிதாயினும் அதனை என்றும் மறவாராக, இறைவன்பால் பிறி விலாத இன்னருள்கள் பெற்றிருந்தும் [2] நெஞ்சம் அப் 'பேற்றை உணராது மறந்து மாறுபடுவதுகண்டு "மாறாடுதி பிண நெஞ்சே ' என்று கடிந்துரைப்பர். எல்லாப் பொருள்களினும் இறைவன் கலந்து நிற்கும் திறத்தை எள்ளும் எண்ணையும் போல் கலந்திருக்கின்றான் என்பது உலகியல்; இதனேயே அடிகளும் மேற்கொண்டு, "எள்ளும் எண்ணெயும்போல் நின்ற எங்தையே '[3] என்று கூறுவர் ; உள்ளீடாகிய நல்லறிவின்றி மூத்த ஒருவனை மூங்கில்போல வளர்ந்துள்ளான் என இழிக்கும் உலகவர் உரையைநயந்து கொண்டு, திருவடிப்பேறு பெற்ற அடியார் போலத் தான் இறைவனுடைய ' தணியார் பாதம்' பெறுதற் கேற்ற உள்ளீடு இன்றித் திண்ணிய உடலுடன் நெடிதுவளர்ந் தேன் எனத் தம்மை இகழ்ந்து ' திணியார் மூங்கில் அனை யேன் [4] ' என்று இசைப்பர். நம் நாட்டு உயர் குடும்பங்களில் வாழ்வோர், பெற்றோர் பெரியோர்க் கடங்காது மனம் விரும்பின செய்தொழுகும் இளைஞனை ஊர்க் காளைபோல் திரிகின்றான்' என இகழ்ந்துரைப்பர். இறைவன் எழுந்தருளக்கண்ட அடியார்கூட்டம் சென்று சேரவும் தனக்கு அவ்வாறு சேர்தற்குவேண்டும் திருவருள் வாய்ப்பு உண்டாகாமையால் அடிகள் தம்முள் நொந்து வருந்தி, இறைவனை நோக்கி, " அருள் பெற்ற சீரேறடியார் நின்


  1. 1. சதக. 21.
  2. 2.௸ 32.
  3. 3௸46
  4. 4. திருச்சதக. 89.