பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

352

சைவ இலக்கிய வரலாறு



பாதம் சேரக்கண்டும் கண்கெட்ட ஊர் ஏறாய் இங்கு உழல்வேனோ, கொடியேன் உயிர்தான் உலவாதே'[1] என்றும், “ஆள்வாரிலி மாடாவேனோ”[2] ” என்றும் கூறுவர். ஒரு சிறு வனப் பிறரொருவர்க்குக் கையடைப் படுத்துவோர், ' “இவன் உம் கையிற்பிள்ளை உமக்கே அடைக்கலம் : இயைந்தது செய்க” என்பது உலகியலில் தொன்று தொட்டுவரும் உரை[3]. அடிகள் இதனை, மகளிர் தம்மை இறைவற்குக் கையடைப்படுத்தும் கூற்றில் வைத்து “உங்கையிற் பிள்ளையுமக்கே யடைக்கலம் என்று, அங்கப்பழஞ் சொற்புதுக்கு மெம்மச்சத்தால், எங்கள் பெருமான் உனக் கொன்றுரைப்போம், கேள்'”[4] என்று பாடுகின்றார்.

இனி, இறுதியாக, திருவாதவூரடிகள் மிக்க எளிய இனிய பொருள்களின் குணஞ்செயல்களை உவமமாகக் கொண்டு அரிய கருத்துக்களை விளக்குவதில் தலைசிறந்து விளங்குவது நன்கு காணத்தக்கதொன்று.

ஊராமிலைக்கக் குருட்டாமிலைக்கும் என்பது ஒரு பழமொழி. நம்மாழ்வார் தாம் பாடிய திருவிருத்தத்திலும், “எப்படி யூராமிலைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும், அப்படியானும் சொன்னேன்” [5]' என இப்பழமொழியை எடுத்தாண்டனர். மிலைத்தல் என்பதற்கு அதன் உரை காரர்கள் கனத்தல் எனப் பொருள் கூறினர். அப்பொருளை விளங்க அடிகள் “ஊராமிலைக்கக் குருட்டா மிலைத்து இங்கு உன் தாளிணை யன்புக்கு ஆராய் அடியேன் அயலே மயல் கொண்டு எழுகேனே”[6] ' என்று கூறுகின்றார். நச்சுமர மாயினும் பச்சை மரத்தை வெட்டலாகாது


.


  1. 1. திருச்சதக. 53.
  2. 2. கோயின் மூத்த, 7
  3. 3. திருமணக் காலத்தில் மணமகளே மணமகற்குக் கையடை செய்யுங்காலும், ' இவள் உம்கையிற் பிள்ளை,உமக்கே அடைக்கலம் ' என்பது வழக்கு. இதனே ஒம்படை எனப் பழந்தமிழ் நூல்கள் குறிக்கின்றன.
  4. 4. திருவெம்பா. 19.
  5. 5. திரு விருத்தம். 94.
  6. 6. சதகம். 37.