பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 சைவ இலக்கிய வரலாறு

திருவாதவூரடிகள் பாடியருளிய திருவாசகத்தில் பாவை யாடல், அம்மானே யாடுதல், பொற்சுண்ணம் இடித்தல், தெள்ளேணம் கொட்டுதல், சாழல் இயம்பல், பூவல்லி கொய்தல், உந்தி பறத்தல், தோனேக்கமாடல், பொன்னூ சலாடல் முதலிய பல விளையாட்டுக்கள் பொருளாகப் பதி கங்கள் பாடப் பெற்றுள்ளன என்று முன்பே கூறினம். இவற்றுள், பாவையாடல் சங்க காலத்தில் இருந்ததொரு நிகழ்ச்சி. மகளிர் நீராடுங்கால் பைஞ்சாய்க் கோரையைக் கொண்டு பாவையொன்று செய்து பூச்சூடி ஒப்பனே செய்து நீர்த்துறை மணலில் வைத்து நீரில் இறங்கி விளையாடுவர். இது பொதுவாக நிகழ்வது. மார்கழித் திங்கள் முன்பனிக் காலமாதலின், அக்காலத்தே மணமாகாத இளமகளிர் விடியலுக்கு முன்னரே எழுந்து தம் தாயரொடு நீர்த் துறைக்குச் சென்று பாவை நிறுவி 'வெம்பாதக வியனில வரைப்பு' எனத் தாயர் காட்டிய நெறி வழியே நின்று பரவி நீராடுவர். அங்ரோட்டு அம்பா ஆடல்' என்றும், "தைந்நீராடல்' என்றும் பெயர் பெற்று நிலவிற்று. அப் போது அவர்கள் பாவையை முன்னிறுத்துப்பாடிய பாட்டு பாவைப் பாட்டு எனப்பட்டது. இடைக் காலத்தே சீவில்லி புத்துாரில் இருந்த சூடிக் கொடுத்த நாச்சியார் எனப்படும் ஆண்டர்ள் பாடிய திருப்பாவை, வையத்து வாழ்வீர்கள் நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளிரோ" என்றும், இவ்வாறு செய்தால், நாட்டில் திங்கள் மும்மாரி பெய்யும், செந்நெல் பெருகி விளையும், கயல் முதலிய மீனினம் வயலில் வளம்பெறும், குவளே முதலியன பூத்துச் சிறப்புச் செய்யும், ஆனிரைகள் பாற்பயன் பெருகும், இள் வாற்ருல் நீங்காத செல்வம் நிறையும் என்றும் கூறுவது பண்டை நாளே அம்பாவாடற் கருத்தை விளக்கி வற்புறுத்துகிறது. - - சங்க காலத்து அம்பாவாடல் நீராடுங்கால் பொது விளே

1. பரிபா. 11 : 80. 2. பரிபா, 11 : 81. 3. டிை 11 . 91.' 4. திருப்பாவை. 2. 5. திருப்பாவை, 3.