பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

360

சைவ இலக்கிய வரலாறு

 கருத்து வகுத்த பண்டை நாளேச் சான்றோர் ஒருவர், இது 'சத்தியை வியந்தது' என்று குறித்துள்ளார்.

இப்பாவைப் பாட்டின் நலத்தில் ஈடுபட்டு இன்பம் துய்த்த பண்டைத் தமிழ்ச் சான்றோர்களும் வேங்தர்களும் தமிழ் நாட்டிலுள்ள சிவன் கோயில்கள்தோறும் மார்கழித் திங்களில் திருவாதிரை நாளில் திருவாதவூரடிகட்குத் திருவிழா எடுத்து, அப்போது அவர் திருமுன்னர் இத்திரு வெம்பாவையை ஒதுதல் வேண்டும் என நிவந்தங்கள் ஏற்படுத்தினர். . .

இடைக்காலச் சோழ வேந்தருள் முதல் வீரராசேந்திரன் காலத்திலேயே திருக்கோயில்களில் திருவெம்பாவையை ஒதும் முறை தோன்றியிருந்தது எனக் கல்வெட்டிலாகா ஆண்டறிக்கை[1] கூறுகிறது. கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் இராசாதிராசன் காலத்தில்தஞ்சைமாநாட்டு வழுவூர் வீரட்டேசுரர் கோயிலில் மார்கழித் திருவாதிரை விழாவில் மணிவாசகர் திருமுன் திருவெம்பாவை ஒதுதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுளது.[2] கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் மாறவன்மனான முதற் சுந்தர பாண்டியன் காலத்தில் பாண்டிநாட்டுநாங்குனேரியிலுள்ள திருநாகேஸ்வரம் என்னும் சிவன் கோயிலில், மார்கழித் திருவிழாவில் திருவெம்பாவை யோதப்பட வேண்டுமென அவனி நாராயணப் பல்லவராயர் என்னும் விற்படைத் தலைவன் ஒருவன் நிவந்தம் விட்டிருக்கின்றான்.[3] கி. பி. பதினான்காம் நூற்றாண்டில் இரண்டாம் அரிஹர தேவ மகாராயர் காலத்தில் திருவொற்றியூரில் இஷபத்தளி யிலார், தேவரடியார், சொக்கத் தளியிலார் முதலியோர் இடையே இருந்து வங்த பிணக்கொன்று தீர்க்கப் பெற்றிருக்கிறது. அத் திர்ப்பின்கண், பதியிலார்களே திருப்பதிகமும் திருவெம்பாவையும் ஒதுதல் வேண்டுமென்பது குறிக்கப்படுகிறது.[4]




  1. A. R. for 1926-7, para 26.
  2. A. R. No. 421 of 1912.
  3. A. R. for 1927-8, para 19,
  4. 4 A. R. for 1913, para 51.