பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

370

சைவ இலக்கிய வரலாறு

 றான்பின்னர் அவன் திரும்ப வரவேயில்லை. அவனைக் காணாமல் வருந்திய அடிகட்கு, அந்த அம்மையார் மருதவாணன் தந்து சென்ற கைப்பெட்டியைக் கொடுத்தார். அதனை ஆர்வத்தோடு திறந்த அடிகட்குத் காதற்ற ஊசியும் ஒலை நறுக்கும் காட்சியளித்தன. ஒலை நறுக்கில் எழுதப் பட்டிருந்த எழுத்துக்கள், ' “காதற்ற வூசியும் வாராது காணும் கடைவழிக்கே” ' என்று உரைத்தன ; பட்டினத்தடிகளின் உள்ளம் பேராமற்றம் எய்திற்று.

உடனே அடிகட்குத் துறவுணர்வு பிறந்தது. ஒட்டுப்பற்றில்லாத உண்மைத்துறவியானார். அப்போது அடிகளை ஈன்ற தாயார் உயிரோடே மிக்க முதுமை யெய்திருந்தார். அவர் தம்மையே பற்றுக் கோடாகக் கொண்டிருந்தமையின் அவர் இனிதிருப்பதற்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்தார். மனைவியாரை நோக்கிச் சிவப்பணிசெய்து இறைவன் திருவருட்கு இலக்காகுக எனப்பணித்தார். அவர்பால் தலைமைக் கணக்கராயிருந்த சேந்தனர் என் பவரை அழைத்துத் தம்முடைய செல்வத்தை நாட்டு மக்களுக்கு வழங்குமாறு பணித்தார். இறைவன் எழுந்தருளியிருக்கும் இடங்கட்குச் சென்று அவனது பொருள்சேர் புகழ்புரியும் புலமைத் தொண்டு ஆற்றலுற்றார்.

மகனாரது மனவேறுபாடு கண்டு மனமுடைந்த அவருடைய" தாயார் இறந்தாராக, அவர்க்கு வேண்டும் கடன்களை அடிகள் நேரே தாமேயிருந்து செய்துமுடித்தார்.

பெருங்குடிவனிகர் செம்மலாய்த் திகழ்ந்த அடிகள் கடுந்துறவுபூண்டு ஊர்தோறும் வீடுதோறும் கையில் உணவு இரந்துண்டு திரிந்தது, அவருடைய உறவினர்க்குப் பெரு வருத்தத்தை உண்டுபண்ணிற்று. அவர்களுள் முதியரும் நண்பருமாகிய பலர் நயமான உரைகள் பல சொல்லி அவர் உள்ளத்தை மாற்ற முயன்றனர். அம் முயற்சி வெற்றி பெறாமை கண்டவர்களில் சிலர் அவர்க்கு நஞ்சு கலந்த உணவுதந்து கொல்ல முயன்றனர். அச்செயல், செய்தவர்கட்கே தீங்கு விளைவித்தது. பின்னர், அவருட் சிலர் வேந்தன்பால் சென்று ஆவன கூறி அடிகளைத் திருத்துமாறு வேண்டினர். வேந்தன், அடிகள் மனமாற்றத்